Dinamalar

தோனிக்கு பின் ரோகித் சர்மா ,  
 

தோனிக்கு பின் ரோகித் சர்மா

துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் தனது 200வது போட்டியில் களமிறங்கினார் ரோகித் சர்மா.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதன் பைனலில் மும்பை, டில்லி அணிகள் மோதின. இப்போட்டி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 200வது போட்டியாக அமைந்தது. இதையடுத்து ஐ.பி.எல்., அரங்கில் 200 போட்டியில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் சென்னையின் தோனி (204 போட்டி) உள்ளார். 3, 4 மற்றும் 5வது இடத்தில் தினேஷ் கார்த்திக் (196), ரெய்னா (193), கோஹ்லி (192) உள்ளனர்.



ரோகித் 'கெத்து'

ஐ.பி.எல்., அரங்கில் தோனியின் சென்னை அணி 2010, 2011 என அடுத்தடுத்த தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் நேற்று மும்பையின் ரோகித் சர்மா, 2019, 2020 என இரு தொடர்களில் கோப்பை கைப்பற்றி அசத்தினார்.



6 முறை

மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா. 2009ல் டெக்கான், 2013, 2015, 2017, 2019, 2020 ல் மும்பை அணிக்காக என ஆறு முறை பைனலில் பங்கேற்றார். இந்த ஆறு முறையும் கோப்பை வென்று அசத்தினார்.



68 ரன்கள்

நேற்று 68 ரன்கள் எடுத்த மும்பை அணியின் ரோகித் சர்மா, ஐ.பி.எல்., பைனலில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் ஐதராபாத்தின் வார்னர் (69, 2016, எதிர்-பெங்களூரு) உள்ளார். டில்லி அணியின் ஸ்ரேயாஸ் (65, 2020, மும்பை) அடுத்த இடம் பெற்றார்.



3000 ரன்கள்

டில்லி அணிக்கு எதிராக 43 ரன்கள் எடுத்த போது, ஐ.பி.எல்., அரங்கில் கேப்டனாக 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் மும்பை அணியின் ரோகித் சர்மா. இவர் ஒட்டுமொத்தமாக 200 போட்டியில் 5230 ரன்கள் எடுத்துள்ளார்.

இதற்கு முன் தோனி (சென்னை), காம்பிர் (கோல்கட்டா), கோஹ்லி (பெங்களூரு) இதுபோல கேப்டனாக 3000 ரன்னுக்கும் மேல் எடுத்தனர்.



4000 ரன்கள்

ரோகித் சர்மா 8 ரன்கள் எடுத்த போது, மும்பை அணிக்காக 4000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். 155 போட்டியில் 30 அரைசதம் உட்பட, இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன் சென்னை அணிக்காக தோனி, பெங்களூரு அணிக்காக கோஹ்லி இந்த மைல்கல்லை எட்டினர்.





Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...