டிரன்ட் பவுல்ட் புதிய வரலாறு ,

துபாய்: மும்பையின் டிரன்ட் பவுல்ட், ஐ.பி.எல்., பைனலின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்.
துபாயில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான பைனலில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.டில்லி அணிக்கு ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. மும்பை சார்பில் முதல் ஓவரை வீசிய டிரன்ட் பவுல்ட், முதல் பந்தில் ஸ்டாய்னிசை வெளியேற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், பைனலின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார்.
16 விக்கெட்
'பவர் பிளே' ஓவர்களில் (முதல் 6) அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை பெற்றார் மும்பை அணியின் டிரன்ட் பவுல்ட். இவர் இந்த சீசனில் 16 விக்கெட்டுகள் (36 ஓவர்) வீழ்த்தினார். இதற்கு முன் மிட்சல் ஜான்சன் 2013 சீசனில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!