Dinamalar

ராகுல் கூட்டணி தொடரும்: பஞ்சாப் அணி திட்டம் ,  
 

ராகுல் கூட்டணி தொடரும்: பஞ்சாப் அணி திட்டம்

புதுடில்லி: ஐ.பி.எல்., பஞ்சாப் அணி கேப்டன் ராகுல், பயிற்சியாளர் கும்ளே கூட்டணி 2021 சீசனிலும் தொடர உள்ளது.

எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் பஞ்சாப் அணி கேப்டனாக லோகேஷ் ராகுல், பயிற்சியாளராக அனில் கும்ளே முதன்முறையாக இணைந்து செயல்பட்டனர். துவக்கத்தில் தடுமாறிய பஞ்சாப் அணி, முதல் 7 லீக் போட்டியில், ஒரு வெற்றி, 6 தோல்வியை பெற்றது. பின் எழுச்சி கண்ட பஞ்சாப் தொடர்ச்சியாக 5ல் வென்றது. 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி 2 லீக் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 14 போட்டியில், 6 வெற்றி, 8 தோல்வி என, 12 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்து வெளியேறியது. இருப்பினும் பேட்டிங்கில் அசத்திய ராகுல், 14 போட்டியில், 670 ரன்கள் குவித்தார்.



ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் 2021 ஏப்ரல்-மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது. இத்தொடரில் ராகுல்-கும்ளே கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளது. இம்முறை சிறப்பாக செயல்பட்ட மயங்க் அகர்வால் (424 ரன்கள்), நிக்கோலஸ் பூரன் (353 ரன்கள்), கிறிஸ் கெய்ல் (288 ரன்கள்), முகமது ஷமி (20 விக்கெட்), ரவி பிஷ்னாய் (12 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (9 விக்கெட்) ஆகியோரும் அணியில் நீடிக்கலாம்.



மேக்ஸ்வெல் (108 ரன்கள்), ஷெல்டன் காட்ரெல் ஆகியோரை கழற்றிவிடப்படுகின்றனர். இதுகுறித்து பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் முடிவு செய்யும்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

ஷமிக்கு சகார் மரியாதை  *காலை தொட்டு வணங்கினார்

ஷமிக்கு சகார் மரியாதை *காலை தொட்டு வணங்கினார்

ஏப்ரல் 17,2021 மும்பை: முகமது ஷமி காலை தொட்டு தீபக் சகார் வணங்கிய போட்டோ வைரல் ஆக பரவி வருகிறது. சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி மும்பையில் நடந்தது. இதில் சென்னை அணி ...
வேட்டியில் சென்னை வீரர்கள் * புத்தாண்டு கொண்டாட்டம்

வேட்டியில் சென்னை வீரர்கள் * புத்தாண்டு கொண்டாட்டம்

ஏப்ரல் 14,2021 மும்பை: சென்னை அணியின் ரெய்னா, சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் வேட்டி அணிந்து புத்தாண்டு கொண்டாடினர். இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. ...
ஷாருக்–ரசல் மோதல் * கோல்கட்டா ரசிகர்கள் கோபம்

ஷாருக்–ரசல் மோதல் * கோல்கட்டா ரசிகர்கள் கோபம்

ஏப்ரல் 14,2021 சென்னை: கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான் கருத்துக்கு, அந்த அணி வீரர் ரசல் பதில் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...