ரபாடா 30 விக்கெட் ,

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார்.
எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லி வேகப்பந்துவீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில் 30 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து அதிக விக்கெட் கைப்பற்றியவருக்கான 'பர்பிள்' நிற தொப்பியை கைப்பற்றினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பையின் பும்ரா 27 விக்கெட் வீழ்த்தி 2வது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை மற்றொரு மும்பை வீரர் டிரன்ட் பவுல்ட் (25 விக்கெட்) தன்வசப்படுத்தினார். அடுத்த இரு இடங்களை முறையே டில்லியின் நார்ட்ஜே (22 விக்கெட்), பெங்களூருவின் யுவேந்திர சகால் (20) கைப்பற்றினர்.
668 விக்கெட்ஐ.பி.எல்., தொடரில் இம்முறை மொத்தம் 668 விக்கெட் வீழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக டில்லியின் ராபாடா, 30 விக்கெட் சாய்த்தார். எந்த ஒரு பவுலரும் 'ஹாட்ரிக்' சாதனை படைக்கவில்லை. மொத்தம் 4,868 'டாட் பால்' வீசப்பட்டன.
நான்கு சூப்பர் ஓவர்
நான்கு போட்டிகள் 'சூப்பர் ஓவர்' வரை சென்றன.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!