Dinamalar

ஐ.பி.எல்., வீரர்களுக்கு கங்குலி நன்றி ,  
 

ஐ.பி.எல்., வீரர்களுக்கு கங்குலி நன்றி

துபாய்: ''கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் நீண்ட நாட்கள் இருப்பது மனதளவில் கடினமானது. இதற்காக ஐ.பி.எல்., வீரர்களுக்கு நன்றி,'' என, பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்த 13வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின், செப். 19 முதல் நவ. 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 8 அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் ஐ.பி.எல்., வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தனர். இதில் அனுமதி இல்லாத இடங்களுக்கு செல்லவும், தேவையில்லாத நபர்களை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓட்டல் அறை, மைதானம் என இருந்தனர்.



இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி, 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''பி.சி.சி.ஐ., மற்றும் அதன் அலுவலர்கள் சார்பாக, எட்டு ஐ.பி.எல்., அணிகளில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு வளையத்திற்குள் நீண்ட நாட்கள் இருப்பது மனதளவில் சவாலானது. இதனை எளிதாக கையாண்டு, தொடரை வெற்றிகரமாக நடத்த உதவி செய்தீர்கள். உங்களது அர்ப்பணிப்பு இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கிறது,'' என, தெரிவித்திருந்தார்.



பொருளாளர் வாழ்த்து

பி.சி.சி.ஐ., பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ''இக்கட்டான காலகட்டத்தில் 13வது ஐ.பி.எல்., சீசனை வெற்றிகரமாக நடத்திய தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா குழுவினருக்கு வாழ்த்துக்கள். இத்தொடருக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இம்முறை உங்களை நாங்கள் 'மிஸ்' செய்தோம். அடுத்த ஆண்டு ரசிகர்களின் கரவோசையை மீண்டும் கேட்கலாம் என்று நம்புகிறேன்,'' என, தெரிவித்திருந்தார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி ...
மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் ...
ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஏப்ரல் 16,2021 லண்டன்: இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்யவுள்ளார். இங்கிலாந்து அணியின் 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் 29. ஐ.பி.எல்., ...