Dinamalar

இஷான் கிஷான் தேர்வு: சேவக் ‘லெவன்’ அணியில் ,  
 

இஷான் கிஷான் தேர்வு: சேவக் ‘லெவன்’ அணியில்

புதுடில்லி: முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவக் தேர்வு செய்த ஐ.பி.எல்., 'லெவன்' அணியில் மும்பை வீரர் இஷான் கிஷான் இடம் பிடித்துள்ளார்.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடந்தது. இதில் பங்கேற்ற வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு, இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக், ஐ.பி.எல்., 'லெவன்' அணியை தேர்வு செய்துள்ளார். இதன்படி, துவக்க வீரர்களாக பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், பெங்களூருவின் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்துக்கு மும்பையின் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். அடுத்த இரு இடங்களை முறையே பெங்களூருவின் விராத் கோஹ்லி, ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கைப்பற்றினர். இந்த அணிக்கு கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.



ஆறாவது இடத்துக்கு பெங்களூருவின் டிவிலியர்ஸ், மும்பையின் ஹர்திக் பாண்ட்யா, போலார்டு ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. இந்த ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் டிவிலியர்ஸ், 6வது இடத்தை தட்டிச் சென்றார்.

வேகப்பந்துவீச்சாளர்களாக டில்லியின் ரபாடா, மும்பையின் பும்ரா, பஞ்சாப் வீரர் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டனர். சுழற்பந்துவீச்சாளர்களாக யுவேந்திர சகால், ரஷித் கான் இடம் பிடித்தனர். இத்தொடரில் அதிகபட்சமாக 30 சிக்சர் பறக்கவிட்ட மும்பையின் இஷான் கிஷான், 12வது வீரராக தேர்வானார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி ...
மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் ...
ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஏப்ரல் 16,2021 லண்டன்: இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்யவுள்ளார். இங்கிலாந்து அணியின் 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் 29. ஐ.பி.எல்., ...