Dinamalar

வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு: அகார்கர் ‘லெவன்’ அணியில் ,  
 

வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு: அகார்கர் ‘லெவன்’ அணியில்

மும்பை: அஜித் அகார்கர் தேர்வு செய்த ஐ.பி.எல்., 'லெவன்' அணியில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.

எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, 5வது முறையாக கோப்பை வென்றது. இத்தொடரில் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்ட, முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர், 'லெவன்' அணியை தேர்வு செய்தார்.



இதில், இம்முறை அதிக ரன்கள் (670) குவித்து 'ஆரஞ்ச்' நிற தொப்பி வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்படவில்லை. துவக்க வீரர்களாக ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், டில்லியின் ஷிகர் தவான் தேர்வாகினர். மூன்றாவது இடத்தை பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு பதிலாக மும்பை அணியின் இஷான் கிஷானுக்கு (516 ரன்கள்) வழங்கினார். மற்றொரு மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் (480 ரன்கள்), 4வது இடத்தை தட்டிச் சென்றார். அடுத்த மூன்று இடங்களை முறையே பெங்களூருவின் டிவிலியர்ஸ் (5வது இடம்), மும்பையின் ஹர்திக் பாண்ட்யா (6வது), டில்லியின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (7வது) ஆகியோருக்கு வழங்கினார். மும்பை 'ஆல்-ரவுண்டர்' போலார்டு இடம் பெறவில்லை.



அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த டில்லியின் ரபாடா (30 விக்கெட்), மும்பையின் பும்ரா (27), வேகப்பந்துவீச்சாளர்களாக தேர்வாகினர். சுழற்பந்துவீச்சாளர்களாக பெங்களூருவின் யுவேந்திர சகால், கோல்கட்டா அணியின் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்றனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

‘ஹாட்ரிக்’ கனவில் பெங்களூரு: கோல்கட்டா அணியுடன் மோதல்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 'ஹாட்ரிக்' வெற்றி ...
மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

மும்பை அணி ‘திரில்’ வெற்றி * ‘வேகத்தில்’ மிரட்டிய பும்ரா, பவுல்ட்

ஏப்ரல் 17,2021 சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் ...
ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஸ்டோக்சிற்கு ‘ஆப்பரேஷன்’

ஏப்ரல் 16,2021 லண்டன்: இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், இடது கைவிரலில் ஏற்பட்ட காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்யவுள்ளார். இங்கிலாந்து அணியின் 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் 29. ஐ.பி.எல்., ...