Dinamalar

இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ்: அலெக்ஸ் கேரி நம்பிக்கை ,  
 

இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ்: அலெக்ஸ் கேரி நம்பிக்கை

மெல்போர்ன்: ‛‛இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதி ஸ்ரேயாஸ் ஐயரிடம் உள்ளது,'' என, அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 25. இதுவரை 18 ஒருநாள் (748 ரன்), 22 சர்வதேச ‛டுவென்டி--20' (417 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், ‛பிளே- ஆப்' சுற்றுக்கு (தகுதிச் சுற்று -2) அழைத்துச் சென்றார்.

இம்முறை டில்லி அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். இவருக்கு இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு இருப்பதாக டில்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலெக்ஸ் கேரி கூறியது:

இந்திய அணிக்கு கேப்டனாக வரும் ஆண்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இரண்டு சீசனில் இவர் டில்லி அணியை சிறப்பாக வழிநடத்தினார். சகவீரர்களுடன் இணைந்து ஒரு அணியாக வெற்றிக்கு போராடுகிறார். சொந்த சாதனையை விட, அணியின் வெற்றிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். இளம் வீரரான இவர், நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்.

சிறந்த பேட்ஸ்மேனாக நம்பிக்கை அளிக்கும் ஸ்ரேயாஸ், நல்ல மனிதராகவும் திகழ்கிறார். சகவீரர்களுடன் நட்பாக பழகி, டில்லி போன்ற மிகப் பெரிய அணியை வழிநடத்துவது எளிதானதல்ல. எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருக்கும் இவர், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து அணியின் வெற்றிக்கு சிறப்பாக திட்டமிடுகிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இவ்வாறு அலெக்ஸ் கேரி கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னையின் இதயத்துடிப்பு தோனி  * பயிற்சியாளர் பிளமிங் பாராட்டு

சென்னையின் இதயத்துடிப்பு தோனி * பயிற்சியாளர் பிளமிங் பாராட்டு

ஏப்ரல் 17,2021 சென்னை: ''சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி,'' என பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். சென்னை ஐ.பி.எல்., அணி கேப்டன் தோனி 39. மும்பையில் நடந்த பஞ்சாப் அணிக்கு ...
 ‘மிஸ் யூ’ விவேக் சார் * நடராஜன் உருக்கம்

‘மிஸ் யூ’ விவேக் சார் * நடராஜன் உருக்கம்

ஏப்ரல் 17,2021 சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு நடராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக நகைச்சுவை நடிகர் விவேக் 59. லேசான நெஞ்சு வலி காரணமாக வடபழநி சிம்ஸ் மருத்துவமனையில் ...
சபாஷ் சஞ்சு சாம்சன் * சங்ககரா பாராட்டு

சபாஷ் சஞ்சு சாம்சன் * சங்ககரா பாராட்டு

ஏப்ரல் 13,2021 மும்பை: ''அடுத்த முறை இன்னும் அதிக துாரம் பந்தை அடித்து, எங்களுக்கு வெற்றி பெற்றுத் தருவார் சாம்சன்,'' என அணி இயக்குனர் சங்ககரா தெரிவித்தார். பஞ்சாப், ராஜஸ்தான் ...