Dinamalar

முரளிதரன் ‘டிஸ்சார்ஜ்’ ,  
 

முரளிதரன் ‘டிஸ்சார்ஜ்’

சென்னை: 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை முடிந்து முரளிதரன் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சு 'ஜாம்பவான்' முத்தையா முரளிதரன் 49. டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் (133 போட்டி) சாய்த்த ஒரே பவுலர். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 1347 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1996ல் உலக கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம் பிடித்திருந்தார். ஐ.பி.எல். தொடரில் சென்னை, கொச்சி அணிக்காக விளையாடிய இவர், தற்போது ஐதராபாத் அணி பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.

இலங்கையில் இருந்த போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, பல்வேறு சோதனைக்குப் பின் ஐ.பி.எல்., தொடருக்காக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை செய்து அடைப்பு சரிசெய்யப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,'முரளிதரனுக்கு 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இவர் தனது வழக்கமான பணிகளை துவங்கலாம்,' என தெரிவித்தது. இதையடுத்து நேற்று முரளிதரன், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...