Dinamalar

சென்னை ‘சூப்பர்’ வெற்றி * சுழலில் ஜடேஜா அசத்தல் ,  
 

சென்னை ‘சூப்பர்’ வெற்றி * சுழலில் ஜடேஜா அசத்தல்

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. சுழலில் ஜடேஜா, மொயீன் அலி அசத்தினர்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.

டுபிளசி 'வேகம்'

சென்னை அணிக்கு டுபிளசி, ருதுராஜ் ஜோடி துவக்கம் கொடுத்தது. உனத்கட் வீசிய போட்டியின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ருதுராஜ், பின் வழக்கம் போல பந்துகளை வீணடித்தார். இவர் 13 பந்தில் 10 ரன் எடுத்தார். மறுபக்கம் சகாரியா பந்தில் சிக்சர் அடித்தார் டுபிளசி. தொடர்ந்து மிரட்டிய இவர், உனத்கட் வீசிய 5வது ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்கள் விளாசினார். கிறிஸ் மோரிஸ் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட டுபிளசி (33 ரன், 17 பந்து), ரியான் பராக்கிடம் 'பிடி' கொடுத்தார்.

மொயீன் 'அவுட்'

மொயீன் அலி 26 ரன் எடுத்தார். ரியான் பராக் வீசிய 11 வது ஓவரில் ரெய்னா, அம்பதி ராயுடு தலா ஒரு சிக்சர் அடித்தனர். சென்னை அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. அடுத்து டிவாட்டியா சுழலில், அம்பதி ராயுடு 2 சிக்சர் விளாசினார். போட்டியின் 14வது ஓவரை வீசிய சக்காரியா திடீர் திருப்பம் ஏற்படுத்தினார்.

இவரது 2வது பந்தில் அம்பதி ராயுடு (27) அவுட்டானார். ஐந்தாவது பந்தில் ரெய்னாவும் (18) கிளம்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சீனியர்' தோனி, 7வது வீரராக களமிறங்கினார். வந்த வேகத்தில் ரன்கள் சேர்க்க தடுமாறினார். ஒருவழியாக இரு பவுண்டரி அடித்த நிலையில் தோனி (18), சக்காரியா 'வேகத்தில்' பட்லரிடம் 'கேட்ச்' கொடுத்தார்.

ஜடேஜா (8) கைவிட, சாம் கர்ரான் (13), ஷர்துல் தாகூர் (0) ரன் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் நம்பிக்கை தந்த பிராவோ 8 பந்தில் 20 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானின் சக்காரியா 3, கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.

ஜடேஜா திருப்பம்

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு மனன் வோரா (14), பட்லர் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சஞ்சு சாம்சன் (1) ஏமாற்றினார். இருப்பினும் பட்லர் வேகமாக ரன்கள் சேர்க்க 11 ஓவரில் ராஜஸ்தான் 87/2 ரன் எடுத்தது. தனது 3வது ஓவரை வீசிய ஜடேஜா, முதல் பந்தில் பட்லரை (49) போல்டாக்கினார். கடைசி பந்தில் ஷிவம் துபேவும் (17) அவுட்டாக, சென்னை பக்கம் போட்டி திரும்பியது.

அடுத்து வந்த மில்லர் (2), ரியான் பராக் (3), கிறிஸ் மோரிசை (0), மொயீன் அலி வெளியேற்ற, சென்னை வெற்றி உறுதியானது. டிவாட்டியா 20, உனத்கட் 24 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொயீன் அலி 3, ஜடேஜா 2 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...