Dinamalar

தமிழகத்தின் அஷ்வின் விலகல் * கொரோனா அச்சத்தில் வீரர்கள் ,  
 

தமிழகத்தின் அஷ்வின் விலகல் * கொரோனா அச்சத்தில் வீரர்கள்

மும்பை: ஐ.பி.எல்., தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் அஷ்வின், ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன் உட்பட முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.

இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மே 30ல் பைனல் நடக்க உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுவதால், வீரர்கள் கலக்கமடைந்துள்ளனர். அடுத்த கட்ட போட்டிகள் டில்லியில் நடக்க உள்ளன. இங்கு கொரோனா உச்சத்தில் உள்ளது.

அஷ்வின் முடிவு

இந்நிலையில், டில்லி அணிக்காக பங்கேற்ற தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், தொடரின் பாதியில் விலகினார். இவர் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,''இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரிலிருந்து 'பிரேக்' எடுக்கிறேன். என் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் கடினமான சூழலில், அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அனைத்தும் சரியான திசையில் சென்றால், மீண்டும் அணிக்கு திரும்புவேன்,' என தெரிவித்துள்ளார்.

இதே போல ராஜஸ்தான் அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை விலகினார். இவர் கூறுகையில்,'தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது. விரைவாக தாயகம் திரும்ப முடிவு செய்தேன். மும்பையில் இருந்து தோகா வழியாக பெர்த் செல்கிறேன். பல வீரர்கள் என்னை தொடர்பு கொண்டனர். எந்த வழியாக ஆஸ்திரேலிய செல்கிறேன் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்,'' என்றார்.

ஆஸ்திரேலிய 'ஸ்பின்னர்' ஜாம்பா, 'வேகப்புயல்' கேன் ரிச்சர்ட்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு வளையத்தில் வாழ்வது கடினம் என கூறி ராஜஸ்தான் அணியின் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் விலகினார். இதுவரை 5 வீரர்கள் விலகியுள்ளனர்.

நியூசிலாந்தின் வில்லியம்சன்(ஐதராபாத்), பவுல்ட்(மும்பை) முழுமையாக பங்கேற்க இயலாது. இவர்கள், இங்கிலாந்துக்கு எதிராக வரும் ஜூன் 2ல் துவங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இதனால் அடுத்த மாத இறுதியில் கிளம்புவர்.

கோல்கட்டா அணியின் ஆலோசகரான ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹசி கூறுகையில்,''கொரோனா அலை வீசும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியுமா என பல வீரர்கள் பதட்டத்தில் உள்ளனர்,''என்றார்.தனி விமானம்

ஐ.பி.எல்., தொடரில் ஸ்டீவ் ஸ்மித்(ஸ்மித்), வார்னர்(ஐதராபாத்), பாட் கம்மின்ஸ்(கோல்கட்டா) என 14 ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். பயிற்சியாளர்கள் பாண்டிங், சைமன் காடிச் மற்றும் வர்ணனையாளர்களாக ஹைடன், பிரட் லீ, ஸ்லேட்டர், லிதா ஸ்தாலேகர் என நிறைய பேர் உள்ளனர். இவர்களை அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தயாராக உள்ளது.

* இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,'இங்கிலாந்து வீரர்கள் விலக விரும்புகின்றனரா என தெரியவில்லை. இது தனிப்பட்ட வீரர்களின் முடிவு. இதில் கிரிக்கெட் போர்டு தலையிட விரும்பவில்லை,' என தெரிவித்துள்ளது.பி.சி.சி.ஐ., உறுதி

இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ஐ.பி.எல்., தொடரின் எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும். பலத்த பாதுகாப்பு வளையத்தில் போட்டிகள் நடக்கின்றன. யாரும் அச்சப்பட தேவையில்லை. விருப்பம் இல்லாத வீரர்கள் விலகிக் கொள்ளலாம்,'' என்றார்.பாதிப்பு இல்லை

வீரர்கள் விலகியதால், சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. பெங்களூரு அணி கேன் ரிச்சர்ட்சனை ரூ. 4 கோடிக்கு வாங்கியது. ஒரு போட்டியில் பங்கேற்ற இவர், ஒரு விக்கெட் தான் வீழ்த்தினார். ரூ. 1.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜாம்பாவும் (பெங்களூரு) ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தமான ஆன்ட்ரூ டை(ரூ.1 கோடி), லிவிங்ஸ்டோன் (ரூ. 75 லட்சம்)ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. டில்லி அணிக்காக 5 போட்டிகளில் பங்கேற்ற அஷ்வின், ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். சக வீரர்களான அமித் மிஸ்ரா, அக்சர் படேல் அசத்துவதால், அஷ்வினுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...