Dinamalar

பிரட் லீ ரூ. 41 லட்சம் நிதி: ‘ஆக்சிஜன்’ வாங்க வழங்கினார் ,  
 

பிரட் லீ ரூ. 41 லட்சம் நிதி: ‘ஆக்சிஜன்’ வாங்க வழங்கினார்

புதுடில்லி: இந்திய மருத்துவமனைகள் 'ஆக்சிஜன்' வாங்க, ரூ. 41 லட்சம் நிதி வழங்கினார் ஆஸ்திரேலியாவின் பிரட் லீ.

இந்தியாவில் 'கொரோனா' தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 14வது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஆக்சிஜன்' வாங்க ரூ. 37 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சக ஐ.பி.எல்., வீரர்களையும் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தினார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, மருத்துவமனைகளின் 'ஆக்சிஜன்' பற்றாக்குறையை போக்குவதற்காக ரூ. 41 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். பிரட் லீ 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''இந்தியாவை எப்போதும் எனது இரண்டாவது வீடாக கருதுகிறேன். போட்டிகளில் விளையாடிய நாட்களிலும், ஓய்வு பெற்ற பின்னரும், இந்திய மக்களிடம் இருந்து கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் என் மனதில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்திய மக்கள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இந்திய மருத்துவமனைகளின் 'ஆக்சிஜன்' பற்றாக்குறையை போக்குவதற்காக ரூ. 41 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறேன். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...