Dinamalar

அவசரப்பட்ட ஆஸி., வீரர்கள் * மும்பை ஓட்டலில் முடங்கினர் ,  
 

அவசரப்பட்ட ஆஸி., வீரர்கள் * மும்பை ஓட்டலில் முடங்கினர்

மும்பை: ஆஸ்திரேலியா திரும்ப திட்டமிட்ட ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், மும்பை ஓட்டலில் முடங்கினர்.

ஐ.பி.எல்., தொடரின் பெங்களூரு அணிக்காக ஒரு போட்டியில் விளையாடியவர் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன். சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா களமிறங்கவே இல்லை. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்தனர்.

கடந்த 25ம் தேதி இருவரும் பெங்களூரு அணியின் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி, மும்பை விமானநிலையத்தின் அருகில் உள்ள ஓட்டலில் தங்கினர்.

தோகா வழியாக பெர்த் திரும்ப திட்டமிட்டனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து விமானங்கள் வர, மே 15 வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதனால் இரு வீரர்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் ஓட்டலுக்குள் முடங்கினர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,''இரு வீரர்களும் நாடு திரும்ப உதவுமாறு ஆஸ்திரேலிய அரசிடம் பேசி வருகிறோம். அனுமதி கிடைக்கவில்லை என்றால், வீரர்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் போர்டிடம் கேட்டுக் கொள்வோம்,'' என்றார்.



பிரதமர் கைவிரிப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில்,''ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வீரர்கள் தனிப்பட்ட முறையில் தான் இந்தியா சென்றனர். இது இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் அல்ல. மே 30ல் பைனல் முடிந்த பின்பும் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தால், வீரர்கள் ஆஸ்திரேலியா வர, அவர்களாகத் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...