Dinamalar

‘லட்டு’ போல ‘ஜட்டு’: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு ,  
 

‘லட்டு’ போல ‘ஜட்டு’: சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்பு

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், கலக்கல் 'பார்மில்' உள்ள சென்னை அணி மீண்டும் சாதிக்க காத்திருக்கிறது.

இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி அசத்துகிறது. வரிசையாக நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 போட்டிகளை மும்பையில் விளையாடியது. இன்று டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஐதராபாத்தை சந்திக்கிறது.

சென்னை அணியின் அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா(செல்லமாக ஜட்டு). சிக்சர்களாக பறக்க விடுகிறார். கடந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல் ஓவரில் 37 ரன்கள் விளாசினார். 3 விக்கெட் வீழ்த்தினார். எதிரணி வீரரரை ரன் அவுட் செய்வது, துடிப்பாக 'கேட்ச்' பிடிப்பது என அனைத்து துறைகளிலும் பட்டையை கிளப்புகிறார். 'லட்டு' போன்ற இவரது இனிப்பான ஆட்டம் இன்றும் தொடர வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். துவக்கத்தில் டுபிளசி-ருதுராஜ், 'மிடில் ஆர்டரில்' ரெய்னா, அம்பதி ராயுடு, 'பினிஷிங்' பணிக்கு கேப்டன் தோனி உள்ளனர். வேகப்பந்துவீச்சில் தீபக் சகார், சாம் கர்ரான், ஷர்துல் தாகூர் மிரட்டுகின்றனர். 'சுழலில்' மொயீன் அலி, ஜடேஜா, இம்ரான் தாகிர் சாதிக்கலாம்.

தவிக்கும் வார்னர்: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணியின் 'பேட்டிங்' பலவீனமாக உள்ளது. வெளிநாட்டு நட்சத்திரங்களான கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், ரஷித் கானை அதிகம் சார்ந்துள்ளது. வார்னர் இன்னும் வாணவேடிக்கை காட்டவில்லை. இந்திய வீரர்களான சகா, விஜய் சங்கர், மணிஷ் பாண்டே எழுச்சி கண்டால் நல்லது. பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தடுமாறுகிறார். 'யார்க்கர்' மன்னன் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது பின்னடைவு.ஆடுகளம் எப்படி

டில்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. சேப்பாக்கம் போல இருக்கும் என்பதால், சென்னை ஸ்பின்னர்கள் அசத்தலாம். இம்ரான் தாகிர் மீண்டும் இடம் பெறலாம்.

* இரவு போட்டி என்பதால் வெப்பத்தின் தாக்கம் இருக்காது. மும்பையை போல பனிப்பொழிவு தொல்லை அதிகம் இருக்காது.யார் ஆதிக்கம்

இரு அணிகளும் 14 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 10, ஐதராபாத் 4ல் வென்றுள்ளன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...