Dinamalar

மீண்டு வருமா மும்பை * இன்று ராஜஸ்தானுடன் மோதல் ,  
 

மீண்டு வருமா மும்பை * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் தற்போது நடக்கிறது. இதில் இன்று டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐந்து முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை அணி, இம்முறை பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறுகிறது. முதல் 5 போட்டியில் 2ல் மட்டும் வென்றது.

கேப்டன் ரோகித் சர்மா (201 ரன்), சூர்யகுமார் யாதவ் (154) தவிர இஷான் கிஷான் (73), போலார்டு (65) என ஒருவரும் பெரியளவு ஸ்கோர் எடுக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 5 போட்டியில் 36 ரன் தான் எடுத்தார். பவுலிங்கில் ராகுல் சகார் அதிகபட்சம் 9 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரன்ட் பவுல்ட் (6), பும்ரா (4) கூடுதல் திறமை வெளிப்படுத்தினால் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் என முன்னணி வீரர்கள் இல்லாமல் சஞ்சு சாம்சன் தலைமையில் தடுமாறுகிறது. 5 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. பேட்டிங்கில் சாம்சன் (187), துபே (110) தவிர வேறுயாரும் கைகொடுப்பதில்லை. பட்லர் (89), மில்லர் (88) ஏமாற்றம் தருகின்றனர். பந்து வீச்சில் 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிஸ் (9 விக்.,), இளம் வீரர் சக்காரியா (7) நம்பிக்கை தருகின்றனர்.

இன்று இரவு ஆமதாபாத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் ரிஷாப் பன்டின் டில்லி, மார்கனின் கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...