Dinamalar

சென்னைக்கு செம ‘விசில்’ அடிங்க * அசத்தலான அஞ்சாவது வெற்றி ,  
 

சென்னைக்கு செம ‘விசில்’ அடிங்க * அசத்தலான அஞ்சாவது வெற்றி

புதுடில்லி: ருதுராஜ், டுபிளசியின் அசத்தலான அரைசதம் கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் பிராவோ, இம்ரான் தாகிர் நீக்கப்பட்டு லுங்கிடி, மொயீன் அலி சேர்க்கப்பட்டனர். டில்லி அணியில் அபிஷேக் சர்மா, விராத்துக்குப் பதில் சந்தீப் சர்மா, மணிஷ் பாண்டே இடம் பெற்றனர்.

லுங்கிடி நம்பிக்கை

ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோவ் (7), வார்னர் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மணிஷ் பாண்டே, 35 பந்தில் அரைசதம் அடித்தார். வார்னர் தன்பங்கிற்கு அரைசதம் எட்டினார். போட்டியின் 18வது ஓவரை வீசிய லுங்கிடி, சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

முதல் பந்தில் வார்னர் (57), 5 வது பந்தில் மணிஷ் பாண்டேவை (61) அவுட்டாக்கினார். ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில், 3 பவுண்டரி, 1 சிக்சர் என 20 ரன்கள் எடுத்தார் வில்லியம்சன். ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் (26), கேதர் ஜாதவ் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ருதுராஜ் அபாரம்

கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு 'சீனியர்' டுபிளசி, 'ஜூனியர்' ருதுராஜ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சுசித் வீசிய 9வது ஓவரில் ருதுராஜ் ஒரு பவுண்டரி, டுபிளசி ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க 17 ரன்கள் கிடைத்தன. இருவரும் இணைந்து முதன் முறையாக, தொடர்ந்து மூன்று போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்னுக்கும் மேல் சேர்த்தனர். இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த போது, ருதுராஜ் (75), ரஷித் சுழலில் போல்டானார்.

ரெய்னா '500'

மொயீன் அலி 15 ரன் எடுக்க, டுபிளசி 56 ரன்னுக்கு அவுட்டானார். கடைசி நேரத்தில் ரெய்னா, ஜடேஜா இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் 500வது பவுண்டரி அடித்தார். சென்னை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா (7), ரெய்னா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.



50

ஐ.பி.எல்., அரங்கில் 50வது அரைசதம் அடித்த முதல் வீரர் ஆனார் வார்னர். இவர் 148 போட்டியில் இந்த சாதனை படைத்தார். அடுத்தடுத்த இடங்களில் தவான் (43), கோஹ்லி (40), டிவிலியர்ஸ் (40), ரோகித் சர்மா (40) உள்ளனர்.



150

ஐதராபாத் அணி வீரர் மணிஷ் பாண்டே நேற்று தனது 150 வது ஐ.பி.எல்., போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008 முதல் இத்தொடரில் பங்கேற்கும் இவர், கோல்கட்டா, மும்பை, புனே, பெங்களூரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.



200

லுங்கிடி பந்தை விளாசிய வார்னர், ஐ.பி.எல்., அரங்கில் 200 சிக்சர் அடித்த 8வது வீரர் ஆனார். இவர் 148 போட்டியில் 201 சிக்சர் அடித்துள்ளார். முதல் 7 இடத்தில் கெய்ல் (354), டிவிலியர்ஸ் (245), ரோகித் சர்மா (222), தோனி (217), கோஹ்லி (204), போலார்டு (202), ரெய்னா (202) உள்ளனர்.



10,000

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் எடுத்த போது, உள்ளூர், சர்வதேசம் என ஒட்டுமொத்த 'டுவென்டி-20' அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் வார்னர். சர்வதேச அளவில் நான்காவது வீரர் ஆனார்.

வீரர் போட்டி ரன்

கெய்ல்/விண்டீஸ் 422 13,839

போலார்டு/விண்டீஸ் 539 10,694

சோயப் மாலிக்/பாக்., 417 10,488

வார்னர்/ஆஸி., 303 10,015

* இந்தியாவின் கோஹ்லி (9894), ரோகித் சர்மா (9266) 6, 9வது இடங்களில் உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...