Dinamalar

மும்பை மூன்றாவது வெற்றி * மீண்டும் வீழ்ந்தது ராஜஸ்தான் ,  
 

மும்பை மூன்றாவது வெற்றி * மீண்டும் வீழ்ந்தது ராஜஸ்தான்

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி மூன்றாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் குயின்டன் டி காக் அரைசதம் கைகொடுக்க, ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் தற்போது நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு, கூல்டர் நைல் சேர்க்கப்பட்டார்.

சாம்சன் நம்பிக்கை

ராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஷ்வால் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்த போது பட்லர் (41) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் ஜெய்ஷ்வால் (32) கிளம்பினார். பின் கேப்டன் சாம்சன், ஷிவம் துபே சேர்ந்து வேகமாக ரன்கள் சேர்க்க முயற்சித்தனர். மும்பை அணியினரின் பவுலிங் துல்லியமாக அமைய, ரன் வறட்சி ஏற்பட்டது. சாம்சன் 42 ரன் எடுத்த போது, பவுல்ட் பந்தில் போல்டானார். மறுபக்கம் தள்ளாடிய துபேயும் (35), பும்ரா 'வேகத்தில்' போல்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. மில்லர் (7), ரியான் பாராக் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

குயின்டன் அபாரம்

மும்பை அணிக்கு குயின்டன் டி காக், ரோகித் சர்மா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா 14 ரன்கள் எடுக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 16 ரன்னுக்கு திரும்பினார். கடந்த 5 போட்டிகளில் தடுமாறிய குயின்டன் டி காக், இம்முறை அரைசதம் எட்டினார். இவருக்கு குர்னால் பாண்ட்யா (39) கைகொடுக்க, மும்பை வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது.

கடைசியில் முஸ்தபிஜுர் பந்தில் போலார்டு ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குயின்டன் டி காக் (70), போலார்டு (16) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த சீசனில் மும்பை பெற்ற மூன்றாவது வெற்றி இது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...