Dinamalar

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம் ,  
 

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

புதுடில்லி: ''எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,'' என பீட்டர்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் 40. ஐ.பி.எல்., தொடரில் வர்ணனையாளராக இருந்தார். வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து பீட்டர்சன் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதில்,''இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது எனது இதயம் வலிக்கிறது. இந்த கடினமான காலத்தை எதிர்கொண்டு, இதிலிருந்து விரைவில் வலிமையாக மீண்டு வருவீர்கள். இக்கட்டான இந்த காலத்திலும் உங்களது அன்பும், பெருந்தன்மையும் எப்போதும் கவனிக்கப்படாமல் போகாது,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

டில்லி அணி மீண்டு வரும்: ரிஷாப் பன்ட் நம்பிக்கை

டில்லி அணி மீண்டு வரும்: ரிஷாப் பன்ட் நம்பிக்கை

அக்டோபர் 14,2021 சார்ஜா: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் டில்லி அணி வலிமையுடன் மீண்டு வரும்,'' என, ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார். சார்ஜாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீனுக்கான 2வது தகுதிச் ...
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... *கோஹ்லிக்கு கவாஸ்கர் ஆறுதல்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... *கோஹ்லிக்கு கவாஸ்கர் ஆறுதல்

அக்டோபர் 12,2021 சார்ஜா: ஐ.பி.எல்., அரங்கில் கேப்டனாக கோப்பையை முத்தமிடும் அதிர்ஷ்டம் கோஹ்லிக்கு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் உச்சம் தொட்ட இவர், பெங்களூரு அணிக்காக 120 சதவீதம் ...
சிறந்த ‘பினிஷர்’ தோனி: பாண்டிங், பிளமிங் பாராட்டு

சிறந்த ‘பினிஷர்’ தோனி: பாண்டிங், பிளமிங் பாராட்டு

அக்டோபர் 11,2021 துபாய்: ''கிரிக்கெட் அரங்கில் சிறந்த 'பினிஷர்களில்' ஒருவராக தோனி திகழ்கிறார்,'' என, பாண்டிங் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் ...