Dinamalar

ஷிகர் தவானுக்கு தடுப்பூசி ,  
 

ஷிகர் தவானுக்கு தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடக்கின்றன.

இதையடுத்து 'சீனியர் துவக்க வீரர் ஷிகர் தவான் 35, தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய இவர், இந்திய கிரிக்கெட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் வீரர் ஆனார். இதற்கு முன் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்ட போது, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஷிகர் தவான் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'அர்ப்பணிப்பு, தியாக உணர்வுடன் போராடி வரும் கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது மட்டும் போதாது. தயவு செய்து முடிந்தவரை அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனாவை வீழ்த்த இது ஒன்றுதான் உதவியாக இருக்கும்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...