Dinamalar

மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல் ,  
 

மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

சென்னை: ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இத்தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கிருந்துஆ மே 16ல் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். இதனிடையே சென்னை அணி பயிற்சியாளர்கள் பாலாஜி (பவுலிங்), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசிக்கு (பேட்டிங்) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சக ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஹசி, மாலத்தீவு செல்ல முடியவில்லை.

தற்போது இருவரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ஹசியிடம் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட சோதனையில் கொரோனா 'பாசிட்டிவ்' என முடிவு வர, மாலத்தீவு செல்வது மறுபடியும் தடைபட்டது. தற்போது, கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 11 முதல் இந்திய விமானங்களுக்கு மாலத்தீவு தடை விதித்துள்ளது. ஒருவேளை ஹசி தேறினாலும் மாலத்தீவு செல்ல முடியாது. வேறு வழியில்லாத நிலையில், இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்வார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சென்னை அணி தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,'' விமானங்களுக்கு தடை இருந்தால், மாலத்தீவில் உள்ள சக ஆஸ்திரேலிய வீரர்களுடன் ஹசி இணைய முடியாது. இருப்பினும் இதுகுறித்து இப்போது கூறுவது சரியாக இருக்காது. முதலில் ஹசி தேற வேண்டும். இதன் பின் சூழ்நிலைக்குத் தகுந்து முடிவெடுப்போம்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...