Dinamalar

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார் ,  
 

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியின் 'பேட்டிங்' பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும், சென்னை அணியின் 'பவுலிங்' பயிற்சியாளர் தமிழகத்தின் பாலாஜிக்கும் 'கொரோனா' தொற்று உறுதியானதால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஹசிக்கு எடுக்கப்பட்ட 'ஆர்.டி.,-பி.சி.ஆர்.,' பரிசோதனையின் முடிவு 'நெகடிவ்' என்று வந்துள்ளது. இதனால் இவர், விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ''மைக்கேல் ஹசிக்கு எடுக்கப்பட்ட 'கொரோனா' பரிசோதனையின் முடிவு 'நெகடிவ்' என்று வந்துள்ளது. தற்போது நன்றாக குணமடைந்துவிட்ட ஹசி, எப்போது ஆஸ்திரேலியா செல்வார், எவ்வழியாக செல்வார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,'' என்றார்.

சகா சந்தேகம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா, ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது 'கொரோனா' தொற்று உறுதியானது. இவருக்கு மீண்டும் எடுக்கப்பட்ட 2 பரிசோதனையில் ஒன்று 'பாசிடிவ்', ஒன்று 'நெகடிவ்' என்று முடிவு வந்ததால், தனிமைப்படுத்துதலை தொடர்கிறார். இதனால் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் 'கொரோனா' பாதுகாப்பு வளையத்தில் இணைவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சகா 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''பரிசோதனையின் முடிவு 'பாசிடிவ்' என்று வந்ததால் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன்,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மே 13,2021 சென்னை: ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இத்தொடரில் ...