Dinamalar

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி ,  
 

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியின் 'பேட்டிங்' பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும், சென்னை அணியின் 'பவுலிங்' பயிற்சியாளர் தமிழகத்தின் பாலாஜிக்கும் 'கொரோனா' தொற்று உறுதியானதால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஹசிக்கு எடுக்கப்பட்ட 'ஆர்.டி.,-பி.சி.ஆர்.,' பரிசோதனையின் முடிவு 'நெகடிவ்' என்று வந்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை இவர், வர்த்தக விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோகா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,''ஆம், நேற்று அதிகாலை மைக்கேல் ஹசி வர்த்தக விமானத்தில் தோகா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார்,'' என்றார்.

இத்தொடரில் பங்கேற்ற மற்ற ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள், தனிவிமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...
மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மே 13,2021 சென்னை: ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இத்தொடரில் ...