Dinamalar

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம் ,  
 

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார்.

துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி (165/6, 20 ஓவர்) 54 ரன் வித்தியாசத்தில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணியை (111/10, 18.1 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் 'வேகத்தில்' அசத்திய பெங்களூருவின் ஹர்ஷல் படேல் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். தவிர இவர், இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 10 போட்டியில், 23 விக்கெட் சாய்த்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் இவர், எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.



இதுகுறித்து ஹரியானாவை சேர்ந்த ஹர்ஷல் படேல் 30, கூறியது: எந்த நேரத்திலும் வருத்தப்பட்டதில்லை. வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகள், அந்த நேரத்தில் எனது திறமைக்கேற்ப எடுக்கப்பட்டவை. ஆனால் இந்திய அணித் தேர்வு என்பது எனது கையில் இல்லை. எனக்கு ஒரே ஒரு இலக்கு மட்டும் தான் உள்ளது. நான் எந்த அணிக்காக விளையாடினாலும், போட்டியில் முழுத்திறமையை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு பேட்டிங் அல்லது பவுலிங்கில் கைகொடுக்க முயற்சிப்பேன். இது, நான் கிரிக்கெட் விளையாடும் வரை எனது குறிக்கோளாக இருக்கும்.

முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்தது மகிழ்ச்சி. இதனை விவரிப்பது கடினம். ஏனெனில் நான் பள்ளி நாட்களில் விளையாடிய போது கூட 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றியது இல்லை. ஐ.பி.எல்., தொடரில் இதற்கு முன் 6 முறை 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது தான் இச்சாதனை படைக்க முடிந்தது.

நாங்கள் புள்ளிப்பட்டியலை பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இதில் கவனம் செலுத்தினால், போட்டியில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி வீரரின் திறமைக்கு ஏற்ப பந்துவீசுகிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் இந்த 'பார்மை' தொடர விரும்புகிறேன்.

இவ்வாறு ஹர்ஷல் படேல் கூறினார்.



20 'ஹாட்ரிக்'

'வேகத்தில்' அசத்திய ஹர்ஷல் படேல், ஐ.பி.எல்., அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த 3வது பெங்களூரு வீரரானார். ஏற்கனவே பெங்களூருவின் பிரவீண் குமார் (2010, எதிர்: ராஜஸ்தான்), சாமுவேல் பத்ரீ (2017, எதிர்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தனர்.

* ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை 20 முறை 'ஹாட்ரிக்' விக்கெட் பதிவானது. தவிர இச்சாதனை படைத்த 17வது வீரரானார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...