துவக்க வாய்ப்பு: இஷான் எதிர்பார்ப்பு ,

அபுதாபி: ''உலக கோப்பையில் ('டி-20') துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக,'' இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
இந்திய 'விக்கெட் கீப்பர் பேட்டர்' இஷான் கிஷான் 23. எமிரேட்சில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., சீசனில் 'பார்மின்றி' தவித்த இவர், பஞ்சாப் (50 ரன், 25 பந்து), ஐதராபாத் (84 ரன், 32 பந்து) அணிகளுக்கு எதிராக எழுச்சி கண்டார். வரும் அக். 17ல் எமிரேட்ஸ், ஓமனில் துவங்கவுள்ள ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து இஷான் கிஷான் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் இழந்த 'பார்மை' மீட்க கோஹ்லி, பும்ரா, ஹர்திக், குர்னால் பாண்ட்யாவின் ஆலோசனை உதவியது. ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போட்டிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, உலக கோப்பையில் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
உலக கோப்பை தொடருக்கு நான் துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு தயார் படுத்திக் கொள்ளும்படி கேப்டன் கோஹ்லி என்னிடம் தெரிவித்தார். உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் ஏமாற்றம்
ஐதராபாத் அணிக்கு எதிராக 40 பந்தில் 82 ரன் விளாசிய மும்பையின் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ''ஐ.பி.எல்., 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது ஏமாற்றம். மீண்டும் 'பார்முக்கு' திரும்பியதில் மகிழ்ச்சி. இனி எனது கவனம் முழுவதும் உலக கோப்பை மீது மட்டுமே இருக்கும். இதற்காக நான் எதையும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்,'' என்றார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!