Dinamalar

மும்பை அணி சரிந்தது ஏன்: கேப்டன் ரோகித் விளக்கம் ,  
 

மும்பை அணி சரிந்தது ஏன்: கேப்டன் ரோகித் விளக்கம்

அபுதாபி: ''இரண்டாவது பாதியில் ஒரு அணியாக இணைந்து செயல்படாததால், மும்பை அணியால் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை,'' என, கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான முதல் பாதியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தது. எமிரேட்சில் நடந்த 2வது பாதியில் பங்கேற்ற 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வியை பெற்றது. ஒட்டுமொத்தமாக 14 போட்டியில், 7 வெற்றி, 7 தோல்வியை பெற்ற மும்பை அணி, 14 புள்ளிகளுடன் 'ரன்-ரேட்' (0.116) அடிப்படையில் 5வது இடம் பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

கடைசியாக அபுதாபியில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிராக 235 ரன் குவித்த போதும், பவுலிங்கில் சோபிக்காததால் மும்பை அணி 42 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற்றது.



இதுகுறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது: இந்தியாவில் விளையாடிய முதல் பாதியில் எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக சிறிது ஓய்வு கிடைத்தது. ஆனால் எமிரேட்ஸ் வந்ததில் இருந்து ஒரு அணியாக இணைந்து சோபிக்கத்தவறிவிட்டோம். இம்முறை 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறாதது ஏமாற்றம். இருப்பினும் தொடரை வெற்றியுடன் முடித்தது ஆறுதல் அளிக்கிறது.

மும்பை போன்ற சிறந்த அணிக்காக விளையாடும் போது சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். இதனை நெருக்கடியாக எண்ணிவிடக் கூடாது. கடந்த 5-6 சீசனில் ஒரே குழுவாக இணைந்து விளையாடி வருகிறோம். இதில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளோம். இதன்மூலம் எங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம்.

இவ்வாறு ரோகித் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...