Dinamalar

சிறந்த ‘பினிஷர்’ தோனி: பாண்டிங், பிளமிங் பாராட்டு ,  
 

சிறந்த ‘பினிஷர்’ தோனி: பாண்டிங், பிளமிங் பாராட்டு

துபாய்: ''கிரிக்கெட் அரங்கில் சிறந்த 'பினிஷர்களில்' ஒருவராக தோனி திகழ்கிறார்,'' என, பாண்டிங் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று-1ல் சென்னை அணி (173/6, 19.4 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை (172/5, 20 ஓவர்) வீழ்த்தி, 9வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது இப்போட்டியின் கடைசி இரு ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டன. அவேஷ் கான் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய தோனி, டாம் கர்ரான் வீசிய 20வது ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், டில்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியது: கிரிக்கெட் அரங்கில் சிறந்த வீரர்களில் தோனியும் ஒருவர். ருதுராஜ் அவுட்டான போது, அடுத்து ரவிந்திர ஜடேஜா வருவாரா அல்லது தோனி வருவாரா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான், 'தோனி தான் வருவார், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முயற்சிப்பார்' என்றேன். இதற்கேற்ப சிறப்பாக செயல்பட்டு அணியை பைனலுக்குள் அழைத்துச் சென்றார். இவரிடம் 'பினிஷிங்' திறன் குறையவில்லை. கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பின்பும், கடைசி கட்ட ஓவர்களில் இவரது செயல்பாடு குறித்து பேசப்படும். எனவே தான் இவரை சிறந்த 'பினிஷர்களில்' ஒருவராக கருதுகிறேன். தோனிக்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் எங்கள் பவுலர்கள் தங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. எனவே நாங்கள் தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.இவ்வாறு பாண்டிங் கூறினார்.பிளமிங் புகழாரம்

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ''தோனியின் செயல்பாடு தனிச் சிறப்பானது. இது எங்களுக்கு உணர்ச்சிகரமான விஷயமாக இருந்தது. ஒவ்வொரு முறை களமிறங்கும் போது அவருக்கான நெருக்கடி எங்களுக்கு தெரியும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அணிக்கு வெற்றி தேடித்தந்தவிதம் பாராட்டுக்குரியது. இதேபோல அணியின் வெற்றிக்கு உதவிய உத்தப்பாவின் செயல்பாடும் பெருமையாக உள்ளது,'' என்றார்.25 முறை

ஐ.பி.எல்., அரங்கில் வெற்றிகரமாக ரன்னை 'சேஸ்' செய்த போது அதிக முறை அவுட்டாகாமல் இருந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை சகவீரர் ரவிந்திர ஜடேஜாவுடன் பகிர்ந்து கொண்டார் தோனி. இவர்கள் தலா 25 முறை அவுட்டாகாமல் இருந்தனர். அடுத்த மூன்று இடங்களில் யூசுப் பதான் (22 முறை), டுவைன் பிராவோ (19), டிவிலியர்ஸ் (19) உள்ளனர்.'கிங் இஸ் பேக்'

பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''கிரிக்கெட் அரங்கில் எப்போதும் மிகச்சிறந்த 'பினிஷர்' தோனி. 'கிங் இஸ் பேக்'. இவரது செயல்பாடு மீண்டும் ஒருமுறை எனது இருக்கையில் இருந்து துள்ளிக் குதிக்கச் செய்தது,'' என்றார்.

திட்டம் என்ன...

சென்னை கேப்டன் தோனி கூறுகையில், ''டில்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் எனது செயல்பாடு பெரிய அளவில் இல்லை. இக்கட்டான நேரத்தில் களமிறங்கியதால் எனது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பவுலர் கையில் இருந்து வெளியேறும் பந்தை பார்த்து அடிப்பது மட்டுமே எனது திட்டமாக இருந்தது. அதை தவிர வேறு எதையும் நான் நினைக்கவில்லை. ஷர்துல் தாகூர், தீபக் சகார் நன்றாக 'பேட்' செய்யக்கூடியவர்கள். முதல் பந்தில் இருந்து ரன் எடுக்க முயற்சிப்பர். இவர்களிடம் இருந்து கிடைக்கும் ஒரு சில பவுண்டரி அணியின் வெற்றிக்கு உதவும். எனவே தான் ஷர்துல் தாகூரை 4வது இடத்தில் களமிறக்கினோம்,'' என்றார்.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...