Dinamalar

ரசிகர்களுக்கு தோனி நன்றி ,  
 

ரசிகர்களுக்கு தோனி நன்றி

துபாய்: சென்னை அணிக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு கேப்டன் தோனி நன்றி தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான பைனலில் தோனி தலைமையிலான சென்னை அணி (192/3, 20 ஓவர்) 27 ரன் வித்தியாசத்தில் மார்கனின் கோல்கட்டா அணியை (165/9, 20 ஓவர்) வீழ்த்தி, 4வது முறையாக கோப்பை வென்றது.



இதுகுறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறியது: நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தென் ஆப்ரிக்காவில் விளையாடிய போது சென்னை அணி ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவு வழங்கினர். இதுதான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. எமிரேட்சில் விளையாடினாலும் சென்னையில் விளையாடியது போல இருந்தது. சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன்.



அடுத்த சீசனில் விளையாடுவேனா என்பது குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். மேலும் இரு புதிய அணிகள் வருகின்றன. ஒவ்வொரு அணியிலும் தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்கள் குறித்து பி.சி.சி.ஐ.,யின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. எந்தவிதத்திலும் சென்னை அணி நிர்வாகம் பாதிக்கப்படக் கூடாது. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படக் கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு தோனி கூறினார்.



வீரர்கள் மகிழ்ச்சி

நான்காவது முறையாக கோப்பை வென்றது குறித்து சென்னை அணி வீரர்களின் கருத்து.

தீபக் சகார்: கடந்த சீசனில் மோசமாக செயல்பட்ட போதும், சென்னை அணி நிர்வாகம் எங்கள் மீது நம்பிக்கை வைத்தது. அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் இம்முறை மகிழ்ச்சி தர வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்கேற்ப சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்றோம்.

டுவைன் பிராவோ: எந்த நாளிலும் அனுபவம், இளமையை வீழ்த்தும் என்பது உறுதியானது.

ரவிந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, ஹேசல்வுட் உள்ளிட்டோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...