Dinamalar

அஷ்வின் செய்தது சரியா * கிரிக்கெட் அரங்கில் விவாதம் ,  
 

அஷ்வின் செய்தது சரியா * கிரிக்கெட் அரங்கில் விவாதம்

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அஷ்வின் 'ரிட்டயர்டு அவுட்' முறையில் வெளியேறியது, புதிய விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

மும்பையில் நடந்த 'டி-20' போட்டியில் ராஜஸ்தான் அணி (165/6), 3 ரன் வித்தியாசத்தில் (163/8) லக்னோவை வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 67/4 ரன் என திணறியது.

பின் வந்த ஹெட்மயருடன் இணைந்த அஷ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராஜஸ்தான் அணி 18.2 ஓவரில் 135 ரன் எடுத்த போது, 23 பந்தில் 28 ரன் எடுத்திருந்த அஷ்வின், மற்றொரு வீரருக்கு வழிவிடும் வகையில் திடீரென 'ரிட்டயர்டு அவுட்' முறையில் வெளியேறினார்.

'டி-20' தொடரில் இதுபோல வெளியேறிய முதல் வீரர் ஆனார் அஷ்வின். ஒட்டுமொத்த 'டி-20' வரலாற்றில் நான்காவது வீரர் ஆனார் அஷ்வின்.

யார் சொன்னது

இவருக்குப் பதில் வந்த ரியான் பராக் 4 பந்தில் 8 ரன் எடுத்தார். அஷ்வினின் இச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் கூறுகையில்,''15வது சீசன் துவங்கும் முன் 'ரிட்டயர்டு அவுட்' குறித்து பேசி இருந்தோம். ஒருவேளை சரியான சூழல் அமைந்தால் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என நினைத்தோம். இது ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு,'' என்றார்.

இதுகுறித்து வெளியான கருத்துக்கள்:

* கிரிக்கெட் விதிகளில் உள்ளது என்றால், அதை ஏன் பயன்படுத்தக் கூடாது.

* 'ரிட்டயர்டு அவுட்' குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தன. இதற்கு துணிச்சல் வேண்டும். சுயநலமில்லாத வீரர், புதிய முறையை கொண்டு வந்துள்ளார்.புதுமை 'பித்தன்'

விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றாலும் கிரிக்கெட் விதிகளை சரியாக பின்பற்றுவதில் வல்லவர் அஷ்வின். கடந்த 2019 'டி-20' தொடரில் பந்து வீசும் போது, கிரீசிற்கு வெளியே நின்ற பட்லரை, அஷ்வின் 'மன்கேடிங்' முறையில் அவுட்டாக்கினார்.

இதுகுறித்து விவாதம் எழுந்தது. தற்போது 'மன்கேடிங்' விதியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்றம் செய்தது. இனிமேல் இது 'ரன் அவுட்' என அழைக்கப்படும்.

* கடந்த சீசனில் அஷ்வின்-ரிஷாப், டில்லி அணிக்காக பேட்டிங் செய்தனர். கோல்கட்டா வீரர் திரிபாதி எறிந்த பந்து, ரிஷாப் கையில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஷ்வின் இரண்டாவது ரன்னுக்கு ஓட முயற்சித்தார். இதற்கு கோல்கட்டா கேப்டன் மார்கன் எதிர்ப்பு தெரிவித்தார்.

கிரிக்கெட் விதிப்படி அஷ்வின் செயல் சரி தான், எனினும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என கூறப்பட்டது. ஆனால் 2019 உலக கோப்பை தொடர் பைனலில் நியூசிலாந்து வீரர் எறிந்த பந்து, இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, எல்லைக் கோட்டை கடந்தது. அம்பயர் 'பவுண்டரி' வழங்கினார். இதுவே உலக கோப்பை வெல்ல கைகொடுத்தது.

* தற்போது அஷ்வின், 'ரிட்டயர்டு' விதியை பயன்படுத்தியுள்ளார் அஷ்வின்.'அவுட்'... 'ஹர்ட்'

* காயம் போன்ற விளையாட இயலாத சூழலில் பேட்டர் வெளியே செல்வதை 'ரிட்டயர்டு ஹர்ட்' என்பர். இவர் மீண்டும் களமிறங்கி பேட்டிங் செய்யலாம்.

* வேறு ஒரு வீரர் களமிறங்கி விளையாட வழிவிடும் வகையில், தானாக முன்வந்து வெளியே செல்வதை 'ரிட்டயர்டு அவுட்' என்பர். எதிரணி கேப்டன் அனுமதித்திக்கும் பட்சத்தில், இந்த வீரர் மீண்டும் பேட்டிங்கை தொடரலாம்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...