Dinamalar

இந்திய அணியில் உம்ரான் மாலிக்: ஹர்பஜன் சிங் விருப்பம் ,  
 

இந்திய அணியில் உம்ரான் மாலிக்:  ஹர்பஜன் சிங் விருப்பம்

மும்பை: ''உலக கோப்பை ('டி-20') தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம் பெற வேண்டும்,'' என, ஹர்பஜன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 22. இதுவரை 3 முதல் தரம் (7 விக்.,), ஒரு 'லிஸ்ட் ஏ' (1 விக்.,), 18 'டி-20' (26 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ள இவர், இந்தியாவில் நடக்கும் 'டி-20' லீக் கிரிக்கெட் 15வது சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டியில், 15 விக்கெட் சாய்த்துள்ளார்.



சமீபத்தில் மும்பையில் நடந்த டில்லி அணிக்கான லீக் போட்டியில் 'வேகத்தில்' மிரட்டிய உம்ரான் மாலிக், 20வது ஓவரின் 4வது பந்தை மணிக்கு 157 கி.மீ., வேகத்தில் வீசினார். இது, இந்த சீசனில் பதிவான அதிவேக பந்துவீச்சானது. இவருக்கு, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கான (அக். 16 - நவ. 13) இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என, இந்திய 'சுழல்' ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஹர்பஜன் கூறியது: எனக்கு மிகவும் பிடித்த வீரர் உம்ரான் மாலிக். இவரை, இந்திய அணிக்கான 'ஜெர்சி' அணிந்து பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் மணிக்கு 150 கி.மீ., வேகத்திற்கு மேல் பந்துவீசக்கூடிய இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பையில் இவர், பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கிறேன். தேர்வுக்குழுவில் நான் இருந்தால் நிச்சயம் இவரை தேர்வு செய்வேன்.

இந்தியாவுக்காக விளையாட வயது முக்கியமல்ல. திறமை இருந்தால் போதுமானது. எனவே இவர், இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன்.



சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, 'டி-20' உலக கோப்பைக்கு முன் எழுச்சி பெறுவர். உலகின் தலைசிறந்த பேட்டர்களான இவர்கள், சாம்பியன் வீரர்கள். உலக கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், யுவேந்திர சகால் இடம் பெற வேண்டும். 'சுழலில்' அசத்தி வரும் இவர்கள் 'மிடில்-ஓவரில்' எதிரணிக்கு நெருக்கடி தந்து விக்கெட் வீழ்த்துவர்.



இவ்வாறு ஹர்பஜன் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

மே 30,2022 ஆமதாபாத்: ''இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தருவதே இலக்கு,'' என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'டி-20' ...
கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...