Dinamalar

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம் ,  
 

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது தலைமையில் பங்கேற்ற 13 சீசனில், 4 முறை சென்னை சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை எதுவும் சரியாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. தோனிக்கு பதில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா பாதியில் விலகினார். விலா எலும்பு காயத்தால் தொடரிலிருந்தும் வெளியேறினார். இதையடுத்து மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இனி அடுத்த சீசனுக்கு அணியை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை நிர்வாகம் உள்ளது. தோனிக்கு வயதாகிவிட்டதால், முன்பு போல கீப்பிங்/பேட்டிங் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

'என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள்' என ஏற்கனவே தோனி கூறியுள்ளார். சென்னை அணியில் தொடர விருப்பம் இல்லையெனில், மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றிருக்க மாட்டார். அடுத்த சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் என நம்புகிறேன்.

தோல்வியில் இருந்து தான் பாடம் படிக்க முடியும். கடைசி கட்ட போட்டிகளில் ஜடேஜா பங்கேற்றிருந்தால், களத்தில் தோனி உடன் சேர்ந்து நிறைய விஷயங்களை கற்றிருக்கலாம். துரதிருஷ்டவசமாக இவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. வரும் காலத்தில் சென்னை அணிக்காக மஞ்சள் நிற ஜெர்சியில் ஜடேஜா களமிறங்குவார். இதில் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

மே 30,2022 ஆமதாபாத்: ''இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தருவதே இலக்கு,'' என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'டி-20' ...
கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...