Dinamalar

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு ,  
 

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார். சமீப காலமாக ரன் சேர்க்க தடுமாறுகிறார். சர்வதேச போட்டிகளில் மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை. தற்போதைய ஐ.பி.எல்., தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை. பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய இவர், சாதாரண வீரராக விளையாடுகிறார். இதுவரை 13 போட்டிகளில் 236 ரன்(சராசரி 19.66) மட்டும் எடுத்துள்ளார். மூன்று முறை 'கோல்டன் டக்' அவுட்டானார். ஒரு அரைசதம் மட்டும் அடித்தார். இதன் காரணமாக ஐ.பி.எல்., தொடரில் இருந்து 'பிரேக்' எடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பலரும் வலியுறுத்தினர். ஆனால், தான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.



இது குறித்து கோஹ்லி கூறியது: கடந்த 10-11 ஆண்டுகளாக தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். சிறிய 'பிரேக்' எடுப்பதில் தவறில்லை. மனம், உடல் அளவில் புத்துயிர் பெற உதவும். என்னை பொறுத்தவரை கிரிக்கெட் மீதான ஆர்வம் ஒருபோதும் குறையாது. ஒருவேளை குறைந்துவிட்டால், அந்த நாளில் இருந்து விளையாட மாட்டேன்.



ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு எனது பங்களிப்பு இல்லை. இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனது அணி சரிவை சந்திப்பதை விரும்பவில்லை. கேப்டனாக இருந்து சாதாரண வீரராக விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இருப்பினும் கடினமாக இல்லை. ஏனெனில் பெங்களூரு அணி கேப்டன் டுபிளசியுடன் சுமூக உறவு உள்ளது. தேவைக்கு ஏற்ப 'பீல்டிங்' வியூகம் அமைக்கும் சுதந்திரத்தை எனக்கு கொடுத்துள்ளார்.



களத்தில் எனது அனுபவங்கள் புனிதமானவை. வெற்றி, தோல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. களத்திலும் வாழ்விலும் கடினமாக உழைக்க வேண்டும். நுாறு சதவீதம் உழைக்கிறேன். அந்த வகையில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன். வாழ்க்கையும் மகிழ்ச்சியாக செல்கிறது. இந்த ஆண்டு நடக்க உள்ள ஆசிய கோப்பை, 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவதே எனது இலக்கு. இரு கோப்பைகளையும் இந்தியா வெல்ல விரும்புகிறேன்.



இவ்வாறு கோஹ்லி கூறினார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

மே 30,2022 ஆமதாபாத்: ''இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தருவதே இலக்கு,'' என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'டி-20' ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...