Dinamalar

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு ,  
 

இந்தியாவுக்கு உலக கோப்பை: ஹர்திக் பாண்ட்யா இலக்கு

ஆமதாபாத்: ''இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தருவதே இலக்கு,'' என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த 'டி-20' கிரிக்கெட் லீக் தொடருக்கான பைனலில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி (133/3, 18.1 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் வழிநடத்திய ராஜஸ்தான் அணியை (130/9, 20 ஓவர்) வீழ்த்தியது. அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பை வென்று சாதித்த குஜராத் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இதன்மூலம் ஹர்திக் பாண்ட்யா, ஐந்தாவது முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். இதற்கு முன், நான்கு முறை (2015, 17, 19, 20) கோப்பை வென்ற மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார். இதுவரை 11 டெஸ்ட், 63 ஒருநாள், 54 சர்வதேச 'டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஐ.சி.சி., தொடர்களில் ஒரு பைனல் (2017 சாம்பியன்ஸ் டிராபி), இரண்டு அரையிறுதியில் (2016ல் 'டி-20', 2019ல் 50 ஓவர் உலக கோப்பை) விளையாடி உள்ளார். ஆனால் இவர் இடம் பெற்ற இந்திய அணி ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, தென் ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியது:

அறிமுகமான முதல் தொடரில் எங்கள் குஜராத் அணி கோப்பை வென்றது மகிழ்ச்சி. இந்த மகத்தான வெற்றியை அடுத்த தலைமுறையினர் பேசுவர். ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்வது சிறப்பானது. இதற்கு முன், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்துள்ளேன். அதனை விட இந்த வெற்றி ஸ்பெஷலானது. ஏனெனில், முதன்முறையாக கேப்டனாக கோப்பைக்கு முத்தமிட்டேன். அதிர்ஷ்டவசமாக நான் பங்கேற்ற 5 பைனலிலும், எனது அணி கோப்பை வென்றது தனிச் சிறப்பு.இந்தியாவுக்காக விளையாடுவது என்பது கனவு நனவானது போன்றது. எத்தனை போட்டிகளில் விளையாடினோம் என்பது முக்கியமல்ல. தேசத்திற்காக விளையாடும் போது எனக்கு அன்பும், ஆதரவும் கிடைக்கிறது. இந்தியாவுக்காக உலக கோப்பை வென்று தருவதே இலக்கு.'டி-20' போட்டி என்பது பேட்டர்களுக்கான போட்டி என்று கூறுகின்றனர். ஆனால் பவுலர்களுக்கான போட்டியும் தான். இம்முறை எங்கள் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த ஷமி (20 விக்கெட்), ரஷித் கான் (19), பெர்குசன் (12), யாஷ் தயால் (11) விக்கெட் வேட்டை நடத்தினர்.கிரிக்கெட் அரங்கில் எனது மோசமான காலத்தில் என் குடும்ப உறுப்பினர்கள், எனக்கு வலுவான துாணாக இருந்துள்ளனர். மனைவி நடாஷா, சகோதரர் குர்னால் பாண்ட்யா ஊக்கம் அளித்தனர். இதனால் வலிமையாக மீண்டு வர முடிந்தது.இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.ரோகித், கோஹ்லிக்கு 'நோ'

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு 'லெவன்' அணியை தேர்வு செய்துள்ளார். இதில் துவக்க வீரர்களாக, அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிரண்டு இடம் பிடித்த ராஜஸ்தானின் பட்லர் (863 ரன்), லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் (616) தேர்வாகினர். அடுத்த இரு இடங்கள் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'மிடில்-ஆர்டரில்' லிவிங்ஸ்டன் (பஞ்சாப்), டேவிட் மில்லர் (குஜராத்) வாய்ப்பு பெற்றனர். விக்கெட் கீப்பர் இடத்தை பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் தட்டிச் சென்றார். 'வேகத்தில்' முகமது ஷமி, ஹர்ஷல் படேல், 'சுழலில்' அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த யுவேந்திர சகால் (27), ஹசரங்கா (26) தேர்வாகினர். இந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளார். ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, தோனி, ரிஷாப் பன்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.தோனி வழியில்...

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில், ''ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் செயல்பாடு தோனியை போல உள்ளது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன். தோனியை சகோதரராகவும், ஹீரோவாகவும் பார்க்கிறார் பாண்ட்யா. ஆடுகளத்தில் அமைதியாக காணப்படும் இவரது பீல்டிங்', 'பவுலிங்' வியூகம் சிறப்பாக உள்ளது. சகவீரர்களை வழிநடத்தும் விதம் பாராட்டுக்குரியது,'' என்றார்.இந்திய கேப்டன் வாய்ப்பு

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில், ''குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை வென்று தந்த ஹர்திக் பாண்ட்யா, அடுத்த இரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம். அதற்கான தகுதி அவரிடம் உள்ளது,'' என்றார்.ரூ. 1.25 கோடி பரிசு

'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசனுக்கான போட்டிகள் மும்பை, புனே, கோல்கட்டா, ஆமதாபாத்தில் உள்ள 6 மைதானங்களில் நடந்தன. போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய ஆடுகள பராமரிப்பாளர்கள், மைதான ஊழியர்களுக்கு பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 1.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், லீக் சுற்று போட்டிகள் நடந்த வான்கடே, பிரபோர்ன் (மும்பை), டி.ஒய். பாட்டீல் (நவி மும்பை), மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க (புனே) மைதானங்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், 'பிளே-ஆப்' சுற்று போட்டிகள் நடந்த ஈடன் கார்டன் (கோல்கட்டா), உலகின் பெரிய மோடி (ஆமதாபாத்) மைதானங்களுக்கு தலா 12.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.உற்சாக வரவேற்பு

'டி-20' கிரிக்கெட் லீக் தொடரில் கோப்பை வென்ற ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியினர், ஆமதாபாத்தின் முக்கிய சாலையில் திறந்த வெளி பஸ்சில் வந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

கோஹ்லி ‘ஹேப்பி’... ரசிகர்கள் வியப்பு

மே 19,2022 மும்பை: ''கிரிக்கெட் வாழ்வில் மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் இருக்கிறேன்,'' என விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி. மூன்றுவித ...
தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

தோனி புதிய இன்னிங்ஸ் * கவாஸ்கர் சூசகம்

மே 16,2022 மும்பை: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் சென்னை அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார்,''என கவாஸ்கர் தெரிவித்தார். சென்னை அணியின் அசைக்க முடியாத வீரர் 'தல' தோனி, 40. இவரது ...
தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

தொடரும் தோனி ஆட்டம் * கவாஸ்கர் கணிப்பு

மே 13,2022 மும்பை: ''சென்னை அணிக்காக தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அணி கேப்டன் தோனி 40. 'டி-20' லீக் தொடரில் 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை ...