Dinamalar

‘ரன் மெஷின்’ ,  
 

‘ரன் மெஷின்’

அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி (5878 ரன்கள், 192 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் சென்னையின் ரெய்னா (5368 ரன்கள், 193 போட்டி), ஐ தராபாத் அணியின் வார்னர் (5254 ரன், 142 போட்டி), மும்பையின் ரோகித் (5230 ரன்கள், 200 போட்டி) உள்ளனர். சென்னை அணி கேப்டன் தோனி (4632 ரன், 204 போட்டி) 8வது இடத்தில் உள்ளார். கெய்ல் '175'

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். கடந்த 2013ல் பெங்களூருவில் நடந்த புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் கெய்ல், 66 பந்தில் 175 ரன்கள் (17 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்தார்.





ரசல் 'சரவெடி'

அதிக 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் டில்லி, கோல்கட்டா அணிகளுக்காக விளையாடிய ஆன்ட்ரி ரசல் முன்னிலையில் உள்ளார். இவரது 'ஸ்டிரைக்ரேட்' 182.33 ஆக உள்ளது. இவரை அடுத்து பென் கட்டிங் (168.79), நிக்கோலஸ் பூரன் (165.39), சுனில் நரைன் (164.27), ஹர்திக் பாண்ட்யா (159.26), மொயீன் அலி (158.46) அதிக 'ஸ்டிரைக்ரேட்' வைத்துள்ளனர்.



கோஹ்லி '973'

ஐ.பி.எல்., அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில், பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி முன்னிலை வகிக்கிறார். இவர், கடந்த 2016ல் நடந்த தொடரில் 16 போட்டியில் 4 சதம், 7 அரைசதம் என 973 ரன்கள் குவித்தார்.



சூப்பர் ஜோடி

எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில் பெங்களூருவின் கோஹ்லி, டிவிலியர்ஸ் ஜோடி முதலிடத்தில் உள்ளது. கடந்த 2016ல் பெங்களூருவில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 229 ரன்கள் குவித்தது. இதே ஜோடி, 2015ல் மும்பைக்கு எதிரான போட்டியில் 2வது விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது.



அதிக அரைசதம்

அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் முன்னிலை வகிக்கிறார். இவர் 142 போட்டியில், 48 அரைசதம் அடித்துள்ளார். இவரை அடுத்து ஷிகர் தவான் (41), கோஹ்லி (39), ரோகித் சர்மா (39), ரெய்னா (38), டிவிலியர்ஸ் (38), காம்பிர் (36) ஆகியோர் அதிக அரைசதமடித்துள்ளனர்.











Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...
ரபாடா 30 விக்கெட்

ரபாடா 30 விக்கெட்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார். எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக ...
லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய ...