Dinamalar

தொடர் நாயகன் ,  
 

தொடர் நாயகன்

ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் வாட்சன் (2008, 2013), சுனில் நரைன் (2012, 2018), ஆன்ட்ரி ரசல் (2015, 2019) முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 2 முறை இவ்விருதை வென்றனர்.

கில்கிறிஸ்ட் (2009), சச்சின் (2010), கெய்ல் (2011), மேக்ஸ்வெல் (2014), விராத் கோஹ்லி (2016), பென் ஸ்டோக்ஸ் (2017), லோகேஷ் ராகுல் (2020) ஆகியோர் தலா ஒரு முறை இவ்விருதை கைப்பற்றினர்.



ஆட்ட நாயகன்

அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்களுக்கான பட்டியலில் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர், 23 முறை இவ்விருது வென்றுள்ளார். இவரை அடுத்து கிறிஸ் கெய்ல் (22), ரோகித் சர்மா (18), தோனி (17), டேவிட் வார்னர் (17), யூசுப் பதான் (16), வாட்சன் (16), ரெய்னா (14), கோஹ்லி (13) ஆகியோர் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றனர்.



பைனல் 'ஹீரோ'

யூசுப் பதான் (ராஜஸ்தான், 2008), கும்ளே (பெங்களூரு, 2009), ரெய்னா (சென்னை, 2010), முரளி விஜய் (சென்னை, 2011), மன்விந்தர் பிஸ்லா (கோல்கட்டா, 2012), போலார்டு (மும்பை, 2013), மணிஷ் பாண்டே (கோல்கட்டா, 2014), ரோகித் சர்மா (மும்பை, 2015), பென் கட்டிங் (ஹைதராபாத், 2016), குர்னால் பாண்ட்யா (மும்பை, 2017), ஷேன் வாட்சன் (சென்னை, 2018), பும்ரா (மும்பை, 2019), டிரண்ட் பவுல்ட் (மும்பை, 2020) ஆகியோர் ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றனர்.



அனுபவம் அதிகம்

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சென்னை, புனே அணிகளுக்காக விளையாடிய தோனி முன்னிலையில் உள்ளார். இவர், 204 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரை அடுத்து ரோகித் சர்மா (200), தினேஷ் கார்த்திக் (196), ரெய்னா (193), விராத் கோஹ்லி (192), ராபின் உத்தப்பா (189), ரவிந்திர ஜடேஜா (184), ஷிகர் தவான் (176), யூசுப் பதான் (174) ஆகியோர் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.



மின்னல் 'பீல்டர்'

அதிக 'கேட்ச்' செய்த 'பீல்டர்கள்' பட்டியலில் ரெய்னா முன்னிலை வகிக்கிறார். இவர், 193 போட்டியில் 102 'கேட்ச்' செய்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் போலார்டு (90 'கேட்ச்'), ரோகித் சர்மா (89), டிவிலியர்ஸ் (83), கோஹ்லி (76) ஆகியோர் அதிக 'கேட்ச்' செய்தனர்.











Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...
ரபாடா 30 விக்கெட்

ரபாடா 30 விக்கெட்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார். எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக ...
லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய ...