Dinamalar

ராகுல் 2000 ரன்கள் ,  
 

ராகுல் 2000 ரன்கள்

துபாய்: பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ஐ.பி.எல்., அரங்கில் தனது 2000 ரன்களை கடந்தார். துபாயில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், தனது 2வது ரன்னை கடந்த போது 2000 ரன்களை பதிவு செய்தார். இவர், 60 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்த இந்திய வீரரானார். எட்டு ஆண்டுகளுக்கு முன், சச்சின் 63 இன்னிங்சில் 2000 ரன்கள் எடுத்திருந்தார். * தவிர ராகுல், குறைந்த இன்னிங்சில் 2000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் முறையே கெய்ல் (48 இன்னிங்ஸ்), ஷான் மார்ஷ் (52) உள்ளனர்.



* ராகுல், இதுவரை 169 போட்டியில், 2 சதம், 16 அரைசதம் உட்பட 2130 ரன்கள் எடுத்துள்ளார்.



132 ரன்கள்

அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் 132* ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். இதற்கு முன், டில்லி அணியின் ரிஷாப் பன்ட் 128 ரன்கள் (எதிர்: ஐதராபாத், 2018) எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

* தவிர ராகுல், இத்தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் முறையே கெய்ல் (175*), பிரண்டன் மெக்கலம் (158*), டிவிலியர்ஸ் (133*) உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...