Dinamalar

மயங்க் அகர்வால் ‘45’ ,  
 

மயங்க் அகர்வால் ‘45’

சார்ஜா: பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் 45 பந்தில் சதமடித்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் 45 பந்தில் சதமடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் கோல்கட்டா அணியின் யூசுப் பதான் (37 பந்து, எதிர்: மும்பை, 2010) உள்ளார்.



183 ரன்கள்

பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஜோடி 183 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோவ்-வார்னர் (185 ரன், எதிர்: பெங்களூரு, 2019), கோல்கட்டாவின் காம்பிர்-கிறிஸ் லின் (184* ரன், எதிர்: குஜராத், 2017) ஜோடிகள் உள்ளன.

* அதிக ரன்கள் சேர்த்த பஞ்சாப் ஜோடிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் கில்கிறிஸ்ட்-ஷான் மார்ஷ் (202 ரன், எதிர்: பெங்களூரு, 2011) ஜோடி உள்ளது.



100வது சிக்சர்

ராஜஸ்தானின் உனத்கட் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தை பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் சிக்சருக்கு அனுப்பினார். இது, இந்த சீசனில் பதிவான 100வது சிக்சர் ஆனது. சார்ஜாவில் 35, அபுதாபியில் 33, துபாயில் 32 சிக்சர் பதிவானது.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...