Dinamalar

தோனியை முந்திய கார்த்திக்: கீப்பராக அதிக ‛கேட்ச்’ ,  
 

தோனியை முந்திய கார்த்திக்:  கீப்பராக அதிக ‛கேட்ச்’

துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ‛கேட்ச்' செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனியை முந்தினார் தினேஷ் கார்த்திக். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 60 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் விக்கெட் கீப்பராக அசத்திய கோல்கட்டா அணியின் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், 4 ‛கேட்ச்' செய்தார். இதில், பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) அடித்த பந்தை ‛டைவ்' அடித்து பிடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு, 110வது ‛கேட்ச்' ஆக அமைந்தது. இவர், 196 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ‛கேட்ச்' செய்த விக்கெட் கீப்பர் வரிசையில் சென்னை அணியின் தோனியை முந்தி முதலிடம் பிடித்தார். தோனி, 204 போட்டியில், 109 ‛கேட்ச்' செய்துள்ளார். இருப்பினும் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி (148 விக்கெட் வீழ்ச்சி, 109 ‛கேட்ச்', 39 ‛ஸ்டெம்பிங்') முதலிடத்தில் உள்ளார். கார்த்திக் (140 விக்கெட் வீழ்ச்சி, 110 ‛கேட்ச்', 30 ‛ஸ்டெம்பிங்') 2வது இடத்தில் உள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

 உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு

அக்டோபர் 14,2021 'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி ...
சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 24,2021 துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ...
சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...