Dinamalar

லோகேஷ் ராகுல் 670 ரன்கள் ,  
 

லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இம்முறை அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இவர், 14 போட்டியில், ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 670 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்தவருக்கான 'ஆரஞ்ச்' நிற தொப்பியை பெற்றார்.



அடுத்த நான்கு இடங்களில் டில்லியின் ஷிகர் தவான் (618 ரன்கள்), ஐ தராபாத்தின் டேவிட் வார்னர் (548), டில்லியின் ஸ்ரேயாஸ் ஐயர் (519), மும்பையின் இஷான் கிஷான் (516) ஆகியோர் உள்ளனர்.



734 சிக்சர்

மொத்தம் 734 சிக்சர் அடிக்கப்பட்டது. இதில் மும்பையின் இஷான் கிஷான், அதிகபட்சமாக 30 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன் (26 சிக்சர்), மும்பையின் ஹர்திக் பாண்ட்யா (25), பஞ்சாப்பின் நிக்கோலஸ் பூரன் (25), கோல்கட்டாவின் மார்கன் (24) அதிக சிக்சர் பறக்கவிட்டனர்.





19,352 ரன்கள்

ஒட்டுமொத்தமாக 19,352 ரன்கள் குவிக்கப்பட்டன. இதில் பவுண்டரி, சிக்சர் மூலம் 10,732 ரன்கள் கிடைத்தன.



110 அரைசதம்

மொத்தம் 110 அரைசதம் பதிவானது. அதிகபட்சமாக பஞ்சாப்பின் ராகுல், பெங்களூருவின் தேவ்தத் படிக்கல், டிவிலியர்ஸ் தலா 5 அரைசதம் அடித்தனர்.

* நான்கு சதம் பதிவானது. டில்லியின் ஷிகர் தவான் 2, பஞ்சாப்பின் ராகுல், மயங்க் அகர்வால் தலா ஒரு சதம் அடித்தனர்.



67 பவுண்டரி

டில்லியின் ஷிகர் தவான், அதிகபட்சமாக 67 பவுண்டரி விளாசினார். இவரை அடுத்து மும்பையின் சூர்யகுமார் யாதவ் (61 பவுண்டரி), பஞ்சாப்பில் லோகேஷ் ராகுல் (58) அதிக பவுண்டரி அடித்தனர்.





Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...
ரபாடா 30 விக்கெட்

ரபாடா 30 விக்கெட்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார். எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக ...
டிரன்ட் பவுல்ட் புதிய வரலாறு

டிரன்ட் பவுல்ட் புதிய வரலாறு

நவம்பர் 10,2020 துபாய்: மும்பையின் டிரன்ட் பவுல்ட், ஐ.பி.எல்., பைனலின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார். துபாயில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான பைனலில் மும்பை, ...