Dinamalar

ரபாடா 30 விக்கெட் ,  
 

ரபாடா 30 விக்கெட்

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லியின் ரபாடா முதலிடம் பிடித்தார். எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டில்லி வேகப்பந்துவீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில் 30 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து அதிக விக்கெட் கைப்பற்றியவருக்கான 'பர்பிள்' நிற தொப்பியை கைப்பற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பையின் பும்ரா 27 விக்கெட் வீழ்த்தி 2வது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை மற்றொரு மும்பை வீரர் டிரன்ட் பவுல்ட் (25 விக்கெட்) தன்வசப்படுத்தினார். அடுத்த இரு இடங்களை முறையே டில்லியின் நார்ட்ஜே (22 விக்கெட்), பெங்களூருவின் யுவேந்திர சகால் (20) கைப்பற்றினர். 668 விக்கெட்

ஐ.பி.எல்., தொடரில் இம்முறை மொத்தம் 668 விக்கெட் வீழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக டில்லியின் ராபாடா, 30 விக்கெட் சாய்த்தார். எந்த ஒரு பவுலரும் 'ஹாட்ரிக்' சாதனை படைக்கவில்லை. மொத்தம் 4,868 'டாட் பால்' வீசப்பட்டன.



நான்கு சூப்பர் ஓவர்

நான்கு போட்டிகள் 'சூப்பர் ஓவர்' வரை சென்றன.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

சாதனை நோக்கி தோனி * ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்ப்பு

ஏப்ரல் 08,2021 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சென்னை கேப்டன் தோனி பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் இருந்து சென்னை அணி ...
லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

லோகேஷ் ராகுல் 670 ரன்கள்

நவம்பர் 10,2020 துபாய்: ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லோகேஷ் ராகுல் முதலிடம் பிடித்தார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய ...
டிரன்ட் பவுல்ட் புதிய வரலாறு

டிரன்ட் பவுல்ட் புதிய வரலாறு

நவம்பர் 10,2020 துபாய்: மும்பையின் டிரன்ட் பவுல்ட், ஐ.பி.எல்., பைனலின் முதல் பந்தில் விக்கெட் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார். துபாயில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான பைனலில் மும்பை, ...