Dinamalar

தோனியின் ‘சென்னை காதல்’ சீனிவாசன் ருசிகரம் ,  
 

தோனியின் ‘சென்னை காதல்’ சீனிவாசன் ருசிகரம்

சென்னை: ''சென்னை மீது 'காதலில்' விழுந்து விட்டார் தோனி. பிறகு நடந்தது எல்லாம் வரலாறு,'' என சீனிவாசன் தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி 39. ஐ.பி.எல்., தொடரில் 2008 முதல் சென்னை அணி கேப்டனாக உள்ளார். சென்னை அணிக்காக 2010, 2011, 2018 என மூன்று முறை ஐ.பி.எல்., கோப்பை, 2010, 2014ல் சாம்பியன்ஸ் லீக் தொடர் கோப்பை வென்று தந்தார்.

இதுகுறித்து சென்னை அணியின் சீனிவாசன் கூறியது:

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சென்னைக்கு முக்கிய பங்குள்ளது. இதனால் ஐ.பி.எல்., துவக்கிய போது, சென்னைக்கு அணி வேண்டும் என தெரிவித்தேன். தவிர சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். இங்கு ஒரு அணி உரிமையாளர் இருக்க வேண்டும் என்ற முடிவின் படி தான் சென்னை அணி உருவானது. பிறகு தோனி வந்தார். சென்னை மீது காதல் கொண்டார். சென்னையும் அவர் மீது காதலில் விழுந்து விட்டது. அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் எல்லாம் வரலாறு ஆகி விட்டது.

தனியார் அணி அமைப்பிலான கிரிக்கெட் என்பது பல நாடுகளுக்கு புதியதல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பே இதுபோல இருந்தன. இங்கு வீரர் என்பவர் தனி நபர். அணியின் நலனுக்காக விளையாடுவார். இவர்களை சிறப்பான முறையில் நடத்த வேண்டும். நாங்கள் இதைப் புரிந்து கொண்டோம். சென்னை அணிக்காக வீரர்கள் மகிழ்ச்சியாக விளையாடினர். மக்களும் அங்கீகரித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...