Dinamalar

வணக்கம் சென்னை * ரோகித் சர்மா உற்சாகம் ,  
 

வணக்கம் சென்னை * ரோகித் சர்மா உற்சாகம்

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் மும்பை அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் ஏப். 9-மே 30ல் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, ஆமதாபாத் என ஆறு நகரங்களில் மட்டும் போட்டிகள் நடக்கவுள்ளன. எந்த அணியும் சொந்தமண்ணில் போட்டிகளில் விளையாடாதவாறு அட்டவணை உள்ளது.

இதன் படி ஏப். 9ல் சென்னையில் துவங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்கான சகால் உள்ளிட்ட பெங்களூரு அணி வீரர்கள் சென்னை வந்து விட்டனர். கேப்டன் கோஹ்லி இன்று வருகிறார். இதனிடையே ரோகித் சர்மா தலைமையில் ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா உள்ளிட்ட மும்பை அணியினர் நேற்று சென்னை வந்தனர்.

சமீபத்திய திருமணத்துக்குப் பின் அணியில் இணைந்த புது மாப்பிள்ளை பும்ராவும் சென்னை வந்தார். இங்கு ஓட்டலில் தங்கும் வீரர்கள், கோரோனா சோதனைக்குப் பின் பயிற்சியை துவக்குவர்.

இதுகுறித்து வெளியான வீடியோ செய்தியில் ரோகித் சர்மா கூறுகையில்,''வணக்கம் சென்னை, மும்பை இந்தியன்ஸ் இங்க வந்துட்டோம்,' என தமிழில் பேசினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...