Dinamalar

மஞ்சள் உடையில் கோஹ்லி *ரசிகர்கள் குழப்பம் ,  
 

மஞ்சள் உடையில் கோஹ்லி *ரசிகர்கள் குழப்பம்

புதுடில்லி: 'டுவிட்டர்' நிர்வாகம் வெளியிட்ட செய்தியால், ஐ.பி.எல்., ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு ஐ.பி.எல்., தொடருக்கு முன் எட்டு அணிகளின் சார்பிலான 'ஹேஷ்டேக்' கணக்கை 'டுவிட்டர்' நிர்வாகம் வெளியிடும். அதில் அந்தந்த அணிகளின் ஜெர்சி இமோஜியும் இடம் பெற்றிருக்கும். இந்த சீசனுக்காக பெங்களூரு அணியின் குறித்த செய்திகளை பகிர, #RCB, #PlayBold மற்றும் #WeAreChallengers என மூன்று 'ஹேஷ்டேக்குகளை' வெளியிட்டது. இதன் அருகில் பெங்களூரு அணியின் சிவப்பு நிற ஜெர்சிக்குப் பதில், சென்னை அணியில் மஞ்சள் நிறத்திலான ஜெர்சி 'இமோஜியை' தவறுதலாக வெளியிட்டது.

இதனால், பெங்களூரு அணியினர் மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாடப் போகின்றனரா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை கோஹ்லி அணிந்திப்பது போன்று சித்தரித்த போட்டோவை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். இதை சென்னை அணி நிர்வாகமும் தனது 'டுவிட்டரில்' வெளியிட்டது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...