Dinamalar

‘பை–பை’ சொல்லுமா மும்பை * இந்துாருக்கு இடம் மாறுமா ,  
 

‘பை–பை’ சொல்லுமா மும்பை * இந்துாருக்கு இடம் மாறுமா

மும்பை: கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல்., போட்டிகள் மும்பையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படலாம். இந்துார், ஐதராபாத் மைதானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன்(ஏப். 9-மே 30) நடக்கவுள்ளது. சென்னை, கோல்கட்டா, மும்பை, டில்லி, பெங்களூரு, ஆமதாபாத் என ஆறு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கும். சொந்தமண்ணில் எந்த அணியும் போட்டியில் பங்கேற்காது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு (ஏப். 9) அணிகள் மோதவுள்ளன.

திடீர் பரவல்

இதனிடையே இந்தியாவில் திடீரென கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மும்பையில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 15 நாட்களில்(ஏப். 10-25)10 லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. தோனி தலைமையிலான சென்னை அணி, இங்கு தனது முதல் போட்டியில் (ஏப். 10) டில்லியை சந்திக்கவுள்ளது. தவிர ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளும் இங்கு உள்ளன.

போட்டி துவங்க ஒரு வாரத்துக்கும் குறைவான நாள் உள்ள நிலையில் மும்பை வான்கடே மைதான பணியாளர்கள் 19 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தவிர மும்பையில் ஊரடங்கு விதிக்கப்பட்டால் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்படும்.

இடம் மாற்றமா

இதனால் மும்பையில் இருந்து போட்டிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஐ.பி.எல்., கட்டுப்பாட்டு குழு திட்டமிட்டு வருகிறது. நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இப்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. மாற்று ஏற்பாடாக இந்துார், ஐதராபாத் மைதானங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வீரர்கள் பாதுகாப்பு தான் முக்கியம்,'' என்றார்.



வீரர்கள் பயிற்சி

ஐ.பி.எல்., தொடருக்காக சென்னை வந்த மும்பை வீரர்கள் நேற்று பயிற்சியை துவக்கினர். ஓட்டம், பேட்டிங், பந்துவீச்சு பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மும்பை அணி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'சென்னை வெப்பநிலை அதிகமாக இருந்த போதும் வீரர்கள் தீவிர பயிற்சி செய்தனர்,' என தெரிவித்துள்ளது.



மீண்டார் ராணா

சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கோல்கட்டா அணி பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் ராணா, தொற்றில் இருந்து மீண்டார். அடுத்தடுத்து இரு முடிவுகள் 'நெகட்டிவ்' என வந்ததால், சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார். இவர் கூறுகையில்,''எனக்கு கொரோனா ஏற்படும் என எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றினேன். இதிலிருந்து மீண்டது மகிழ்ச்சி. அனைவரும் விதிகளை சரியாக பின்பற்றுங்கள்,'' என்றார்.



சென்னைக்கு சிக்கலா

ஐ.பி.எல்., தொடருக்காக மும்பை சென்ற சென்னை அணி பணியாளருக்கு கொரோனா ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,''அணியுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உறுதியானது. ஆனால் இவருக்கும் அணி வீரர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை,'' என்றார்.



புதிய பணியாளர்கள்

கொரோனா பாதித்த மும்பை வான்கடே மைதான பணியாளர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்குப் பதில் மும்பை, கண்டிவலி மைதானத்தின் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் எனத் தெரிகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...