Dinamalar

பெங்களூரு வீரருக்கு ‘கொரோனா’ ,  
 

பெங்களூரு வீரருக்கு ‘கொரோனா’

சென்னை: ஐ.பி.எல்., பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல், 'கொரோனா' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியில் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 20, இடம் பெற்றுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் அதிக ரன்கள் (473 ரன், 15 போட்டி) சேர்த்த பெங்களூரு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். சமீபத்தில் முடிந்த சையது முஷ்தாக் அலி டிராபி (218 ரன், 6 போட்டி), விஜய் ஹசாரே டிராபி (737 ரன், 7 போட்டி) உள்ளூர் தொடரில் கர்நாடகா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வரும் ஏப். 9ல் துவங்கவுள்ள 14வது ஐ.பி.எல்., தொடருக்காக பெங்களூரு அணியினர் சென்னை வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் தேவ்தத் படிக்கல் 'கொரோனா' பிடியில் சிக்கியது உறுதியானது. இதனையடுத்து இவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இவர், பெங்களூரு அணிக்காக முதலிரண்டு போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். இதன்மூலம் கொரோனா தொற்று உறுதியான 3வது ஐ.பி.எல்., வீரரானார். ஏற்கனவே நிதிஷ் ராணா (கோல்கட்டா), அக்சர் படேலுக்கு (டில்லி) இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ராணா தேறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...