Dinamalar

ரிங்கு சிங் விலகல்: குர்கீரத் சிங் தேர்வு ,  
 

ரிங்கு சிங் விலகல்: குர்கீரத் சிங் தேர்வு

சென்னை: கோல்கட்டாவின் ரிங்கு சிங் முழங்கால் காயத்தால் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக குர்கீரத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., தொடருக்கான கோல்கட்டா அணியில் ரிங்கு சிங் 23, இடம் பெற்றுள்ளார். உள்ளூர் போட்டியில் உ.பி., அணிக்காக விளையாடும் இவர், கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி சார்பில் ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். ஐ.பி.எல்., அரங்கில் 11 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், முழங்கால் காயம் காரணமாக 14வது ஐ.பி.எல்., சீசனில் இருந்து விலகினார்.

ரிங்கு சிங்கிற்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கோல்கட்டா அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து உள்ளூர் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் குர்கீரத் சிங் மன் 30, அடிப்படை ஏலத்தொகையான ரூ. 50 லட்சத்திற்கு கோல்கட்டா அணியில் ஒப்பந்தமானார். கடந்த 2012ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமான குர்கீரத் சிங், கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக 8 போட்டிகளில் விளையாடினார். ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை இவர், 41 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...