Dinamalar

ஐதராபாத்தில் நடக்குமா ஐ.பி.எல்.,: அசார் அழைப்பு ,  
 

ஐதராபாத்தில் நடக்குமா ஐ.பி.எல்.,: அசார் அழைப்பு

புதுடில்லி: ஐதராபாத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த அசார் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப். 9ல் துவங்குகிறது. இதற்கான போட்டிகள் சென்னை, கோல்கட்டா, மும்பை, டில்லி, பெங்களூரு, ஆமதாபாத் என 6 மைதானங்களில் மட்டும் நடக்கும். இந்தியாவில் திடீரென கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் தாக்கம் மும்பையில் அதிகமாக உள்ளது. மும்பை, வான்கடே மைதானத்தில் 10 லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்நிலையில் இம்மைதான பணியாளர்கள் 19 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இப்போட்டிகளை மும்பையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), ஐ.பி.எல்., கட்டுப்பாட்டு குழு திட்டமிட்டு வருகிறது. இதற்காக இந்துார், ஐதராபாத் மைதானங்களை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான முகமது அசார், ஐ.பி.எல்., போட்டிகளை ஐதராபாத்தில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில், ''தற்போதுள்ள கடினமான காலத்தில், ஒருவருக்கொருவர் துணையாக நிற்க பல காரணங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., தொடரை பாதுகாப்பாகவும், பாதுகாப்பான இடத்தில் நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம், அதன் வசதிகளை பி.சி.சி.ஐ.,க்கு வழங்க விரும்புகிறது,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...