Dinamalar

சென்னை வியூகம் மாறுமா: சேப்பாக்கம் போல வருமா ,  
 

சென்னை வியூகம் மாறுமா:  சேப்பாக்கம் போல வருமா

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முன்னணி அணிகள் கலக்கம் அடைந்துள்ளன. சேப்பாக்கத்தில் போட்டிகளில் பங்கேற்க முடியாதது சென்னை அணிக்கு சிக்கலாக அமையலாம். இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர்(ஏப். 9-மே 30) நடக்க உள்ளது. கொரோனா காரணமாக போட்டிகள் 6 நகரங்களில் மட்டுமே நடக்கிறது. சொந்த மண்-வெளியே என மாறி மாறி விளையாடும் வாய்ப்பு அணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனெனில் சொந்த மண் ஆடுகளத்தின் தன்மையை வைத்தே வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். உதாரணமாக சேப்பாக்கம் மைதானம் சழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிர, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் வெற்றிக்கு உதவும்.

இம்முறை சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் போட்டிகள் இல்லை. லீக் சுற்றில் மும்பையில் 5, டில்லியில் 4, பெங்களூருவில் 3, கோல்கட்டாவில் 2 போட்டிகளில் பங்கேற்கிறது. மும்பையில் தனது முதல் போட்டியில் (ஏப்.10ல்) டில்லியை சந்திக்கிறது. முன்பு லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் பங்கேற்றது. தற்போது வெளிமாநிலத்தில் விளையாட இருப்பதால், வெற்றிக்கான வியூகத்தை மாற்ற வேண்டும். 'ஸ்பின்னர்களை' மட்டுமே நம்ப முடியாது. 2019ல் சேப்பாக்கத்தில் சென்னை அணி 'ஸ்பின்னர்கள்' 62 விக்கெட் வீழ்த்தினர். 2020ல் எமிரேட்சில் 20 விக்கெட் தான் கைப்பற்றினர்.

இம்முறை பேட்டிங்கிற்கு சாதகமான 10 மைதானங்களில் சென்னை அணி விளையாட உள்ளது. இங்கு 'ஸ்பின்னர்கள்' சாதிப்பது கடினம். 2018ல் இருந்து மும்பை, பெங்களூரு, கோல்கட்டா ஆடுகளத்தில் ஸ்பின்னர்கள் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். அதே நேரத்தில், இங்கு முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சராசரி 175 ரன்னாக உள்ளது. இதனை உணர்ந்து தோனி தலைமையிலான சென்னை அணி, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துவக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான ஸ்கோரை எட்ட வேண்டும்.

கோஹ்லிக்கு சவால்: ராஜஸ்தானுக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானம் கோட்டை போன்றது. இங்கு 2008-2013ல் பங்கேற்ற 38 போட்டிகளில் 29ல் வென்றது. இம்முறை சவாலான மும்பை களத்தில் ஆட்டத்தை துவக்குகிறது. கோஹ்லியின் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் ரன் மழை பொழிவது வழக்கம். தற்போது பேட்டிங்கிற்கு கடினமான சென்னை, ஆமதாபத்தில் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஐதராபாத் அணியின் பலம் பவுலிங். முதல் 9 போட்டிகளை ஸ்பின்னர்களுக்கு சாதகமான சென்னை, டில்லியில் விளையாடுகிறது சாதகமான விஷயம்.

மும்பைக்கு சாதகம்: கோல்கட்டா அணி அதிகமான போட்டிகளை பெங்களூரு, ஆமதாபாத்தில் விளையாடுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது என்பதால், அதிக சிக்சர் அடிக்க முயற்சிக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு உள்ளூர் மொகாலி என்றாலும், புனே, இந்துாரில் விளையாடிய அனுபவம் உண்டு. இதனால் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது.

'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, முதல் 5 போட்டிகளை தனக்கு ராசியான சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது. இங்கு சென்னை அணியை தொடர்ந்து 5 முறை வென்றுள்ளது. டில்லி அணியை எடுத்துக் கொண்டால் அஷ்வின், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் என வலுவான சுழல் கூட்டணி உள்ளது. ஆனால், சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாடுவது பலவீனம்.

சபாஷ் மொயீன்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கிறார் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து 'ஆல்-ரவுண்டர்' மொயீன் அலி. இவரை ரூ. 7 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. மதுவுக்கு எதிரான கொள்கை கொண்டவர். சென்னை அணியின் ஜெர்சியில் இடம்பெற்றிருந்த மதுபான விளம்பர லோகோவை நீக்கும்படி வலியுறுத்தினார். இதனை ஏற்ற சென்னை அணி நிர்வாகம், மொயீன் ஜெர்சியில் இருந்த சர்ச்சைக்குரிய லோகோவை நீக்கியது.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...