Dinamalar

தோனி சிக்சர் மழை * பயிற்சியில் அபாரம் ,  
 

தோனி சிக்சர் மழை * பயிற்சியில் அபாரம்

மும்பை: வலைப்பயிற்சியில் தோனி சிக்சர்களாக விளாசிய வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன், வரும் 9ல் துவங்குகிறது. மும்பையில் ஏப். 10ல் நடக்கும் போட்டியில் சென்னை அணி, டில்லியை சந்திக்கவுள்ளது. ரெய்னா கடந்த சீசனில் இல்லாமல் போனது, ஒட்டுமொத்த பேட்டிங்கையும் பாதித்தது. 11 சீசனில் முதன் முறையாக அடுத்த சுற்றுக்கு செல்லாமல், 7வது இடம் பெற்று வெளியேறியது. இம்முறை மீண்டும் தோனி தலைமையில், ரெய்னா 'மிடில் ஆர்டரில்' விளையாட உள்ளார்.

சொந்தமண்ணில் போட்டிகள் இல்லை என்பதால் சென்னை அணி கடந்த 26ல் மும்பை சென்றது. தோனியின் கடைசி தொடராக இது இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் எப்படியும் கோப்பை வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அணியினர் தீவிர பேட்டிங், பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தோனியை பொறுத்தவரையில் இதுவரை 204 ஐ.பி.எல்., போட்டிகளில் தோனி 4632 ரன்கள் எடுத்துள்ளார். 2020 சீசனில் கேப்டன் தோனி 14 போட்டியில் 200 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். வரும் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டலாம்.

இதனிடையே பேட்டிங் பயிற்சியில் தோனி, பந்துகளை பலமுறை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதுகுறித்த வீடியோவை சென்னை அணி தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் வெளியிட்டது. அதில்,'தல பராக்... முழு வேகத்தில்,' என தெரிவித்துள்ளது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...