Dinamalar

புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு ,  
 

புதிய கேப்டன் சஞ்சு சாம்சன்: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு

மும்பை: ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்தார். கடந்த சீசனில் இவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடைசி இடம் பிடித்தது. இதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய கேப்டனை நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஆறு ஆண்டுகளாக (2013-15, 2018-20) ராஜஸ்தானுக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 26, புதிய கேப்டனாக நியமித்துள்ளது. கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா (2012), டில்லி (2016-17) அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

தோனி வாழ்த்து

சஞ்சு சாம்சன் கூறுகையில், ''ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. இதற்காக கோஹ்லி, ரோகித், தோனி ஆகியோரிடம் இருந்து வாழ்த்து செய்தி கிடைத்தது. தலைமை பயிற்சியாளர் சங்ககராவுடன் இணைந்து பணியாற்ற இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது அனுபவம், அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

ராஜஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வரும் ஏப். 12ல் மும்பையில் சந்திக்கிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...