Dinamalar

பயிற்சியில் ‘வாத்தி கம்மிங்’ * அஷ்வின் அசத்தல் ,  
 

பயிற்சியில் ‘வாத்தி கம்மிங்’ * அஷ்வின் அசத்தல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் 'நம்பர்-1' டெஸ்ட் பவுலர், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டியில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐ.பி.எல்., தொடரில் 154 போட்டிகளில் 138 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். கடந்த சீசன் முதல் டில்லி அணிக்காக (15 போட்டி, 13 விக்.,) விளையாடிய இவர், பைனலுக்கு முன்னேற கைகொடுத்தார். வரும் தொடரில் 12 விக்கெட் வீழ்த்தினால், 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்ட காத்திருக்கிறார். பின்வரிசை பேட்டிங்கிலும் ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவுவார். 14வது சீசன் ஐ.பி.எல்., தொடருக்காக தற்போது மும்பை சென்றுள்ளார்.

இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 'ஜிம்மில்' எடை துாக்குவதற்கு தயாராகும் போது, பின்னணியில் 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்...' பாடல் ஒலிக்கிறது. இதற்கேற்ப தனது வலது தோள்களை அசைத்து நடனமாடி மகிழ்ந்தார் அஷ்வின். இதுகுறித்து டில்லி அணி வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' வீடியோவில்,'ஜிம் பயிற்சியில் எப்படி ஜாலியாக இருக்க வேண்டும் என 'மாஸ்டர்' அஷ்வினுக்கு தெரிந்துள்ளது,' என தெரிவித்துள்ளது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...